கம்பராமாயணம் 6085 · சுந்தர 15.77
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செல்வ ! - எல்லாச்செல்வமும் உடையவனே !; ஒரு கணத்து இரண்டுகண்டேன் - ஒரு கணப் பொழுதிலே, ஒன்றற்கு ஒன்று மாறுபாடான இரண்டுவியக்கத்தக்க நிகழ்ச்சிகளையான் பார்த்தேன்; ஒளி மணி ஆழி - (அவைஎன்ன எனில்) விளங்குகின்ற இரத்தினம் பதிக்கப் பெற்ற மோதிரத்தை; ஆன்றதிருமுலைத் தடத்து வைத்தாள் - பிராட்டி, தனது சிறந்த கொங்கைகளின்மேல் வைத்தாள்; வைத்தலும் - வைத்தவுடன்; நின்பால் விரகம் என்பதனின்வந்த வெம் கொழும் தீயினால் வெந்து உருகியது - உன்னிடத்தினின்றும்பிரிந்த விரகதாபம் என்பதனால் உண்டான வெப்பமாகிய செழித்தநெருப்பினால் சூடேறி உருகிவிட்டது; குளிர்ப்பு உள் ஊற உடனே ஆறிவலித்தது - (மோதிரம் உடம்பில் பட்ட மனமகிழ்ச்சியினாலாகிய) குளிர்ச்சிடடலில் மிகுதலால் அப்பொழுதே (அவ்வெப்பம் தணிந்து) இறுகிமுன் போல்உறுதிப்பட்டுவிட்டது. மோதிரம், பிராட்டியின் விரகத் தீயால் உருகுதலும், மகிழ்ச்சியாக குளிர்ச்சியால் இறுகுதலும் ஆகிய மாறுபட்ட இரு தன்மைகளையும் ஒருகணத்தில் கண்டேன் என்றதாம். விரகம் - பிரிவால் நிகழும் காம வேதனை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In a single moment I saw two things: the bright jewelled ring
- she placed on her noble breasts; and as soon as she placed it, O fortunate one,
- it melted, scorched by the fierce, thriving fire that comes from longing
- for you; and at once it cooled and hardened again, as coolness welled up within.
What the poem says
Aṉumaṉ describes a marvel. When Cītai pressed the ring to her breast, it first melted in the burning heat of her separation from Irāmaṉ, then instantly solidified again in the coolness of the joy it brought her. Two opposite effects in one moment show both her anguish and her delight.