கம்பராமாயணம் 6087 · சுந்தர 15.79

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அன்னவர்க்கு, அடியனேன், நிற் பிரிந்தபின் அடுத்த எல்லாம்,
சொல்முறை அறியச் சொல்லி, 'தோகை! நீ இருந்த சூழல்
இன்னது என்று அறிகிலாமே, இத்தனை தாழ்த்தது'என்றேன்;
மன்ன, நின் வருத்தப் பாடும் உணர்த்தினேன்; உயிர்ப்பு வந்தாள்.

பொருள் · Meaning in Tamil

மன்ன ! - தலைவனே!; அடியனேன் நின் பிரிந்தபின் அடுத்த எல்லாம் அன்னவர்க்கு சொல்முறை அறிய சொல்லி - அடியவனாகிய நான் உன்னைப் பிரிந்த பிறகு நேர்ந்த செய்திகளை எல்லாம் பிராட்டியார்க்குச் சொல்லும் முறைமையால் அறியும்படிச் சொல்லி; தோகை நீ இருந்த சூழல் இன்னது என்று அறிகிலாமே - மயில் போன்றவளே ! நீ இருந்த இடம் இன்ன இடத்தது என்று தெரியாமையினாலேயே; இத்தனை தாழ்த்தது என்று - இத்தனை காலம் நீட்டித்தது என்றும் சொல்லி; நின் வருத்தப்பாடும் உணர்த்தினென் - (பிராட்டியைப் பிரிந்ததனால்) நீ வருத்தப்படும் தன்மையையும் தெரியச் சொன்னேன்; உயிர்ப்பு வந்தாள் - (அது கேட்டு) மூச்சு விடுதல் உற்றாள்.

பிராட்டியைஇராமபிரான் அதுவரை வந்து காணாமைக்குக் காரணம் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. To her I, your servant, told all that had happened since she was parted from you,
  2. telling it in due order so she would understand; and saying, Peacock!
  3. it is because we did not know what place you were in
  4. that so much delay has come; I made known your suffering too, O king; and she breathed again.

What the poem says

Aṉumaṉ tells how he explained to Cītai everything that had happened to Irāmaṉ since her abduction, and why rescue had been so long in coming: no one knew where she was. When he described how Irāmaṉ himself had suffered, she revived and breathed freely.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉavarkku, aṭiyaṉēṉ, niṟ pirintapiṉ aṭutta ellām,
colmuṟai aṟiyac colli, 'tōkai! nī irunta cūḻal
iṉṉatu eṉṟu aṟikilāmē, ittaṉai tāḻttatu'eṉṟē;
maṉṉa, niṉ varuttap pāṭum uṇarttiṉeṉ; uyirppu vantāḷ.