கம்பராமாயணம் 6088 · சுந்தர 15.80

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இங்கு உள தன்மை எல்லாம் இயைபு உளி இயையக் கேட்டாள்;
அங்கு உள தன்மை எல்லாம் அடியனுக்கு அறியச் சொன்னாள்;
'திங்கள் ஒன்று இருப்பென், இன்னே திரு உளம் தீர்ந்த பின்னை;
மங்குவென் உயிரொடு'என்று, உன் மலர் அடி சென்னி வைத்தாள்.

பொருள் · Meaning in Tamil

இங்கு உள தன்மைஎல்லாம் இயைபுளி இயையக் கேட்டாள் - இவ்விடத்தில் உள்ளனவான நிலைமைகள் எல்லாவற்றையும் நடந்தபடியே (நிகழ்ந்த முறையில் பொருந்தக் கேட்டு; அங்கு உள தன்மை எல்லாம் அடியனேற்கு அறியச் சொன்னாள் - அவ்விடத்தில் உள்ள நிலைமைகளை எல்லாம், அடியவனாகிய எனக்குத் தெரிந்து கொள்ளும்படி விளக்கமாகக் கூறினாள்; இன்னே திங்கள் ஒன்று இருப்பென் - (மேலும்) இந்த இடத்தில் ஒரு மாத காலம் உயிர் வைத்திருப்பேன்; திருவுளம் தீர்ந்த பின்னை - (அதற்குள் என்னை மீட்க எம்பெருமானுக்கு) மனம் இல்லையாகுமானால், அதன் பின்பு; உயிரோடு மங்குவென் என்று உன் மலரடி சென்னிவைத்தாள் - உயிரிழப்பேன் என்று சொல்லி, உனது தாமரை மலர் போன்ற திருவடிகளைத் தலைமீது வைத்து (வணங்குவது போல) வணங்கிச் சொன்னாள்.

பிராட்டி, தன்னைமீட்கக் காலக் கெடு வைத்ததை அனுமன் சொன்னானாயிற்று. 'மலரடி சென்னி வைத்தாள்' பாவனை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. She heard all that had passed here, in proper order;
  2. she told me, your servant, all that is there, so that I would know;
  3. I will live one month more, right here; if your gracious heart turns away after that,
  4. I will fade away with my life, she said, and placed your flower feet upon her head.

What the poem says

Cītai learned all that had happened on Irāmaṉ's side, told Aṉumaṉ all about her own condition, and then set a time limit: she would stay alive one more month, and if he had not come by then she would die. She bowed as if laying Irāmaṉ's feet on her head.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṅku uḷa taṉmai ellām iyaipuḷi iyaiyak kēṭṭāḷ;
aṅku uḷa taṉmai ellām aṭiyaṉēṟku aṟiyac coṉṉāḷ;
'tiṅkaḷ oṉṟu iruppeṉ, iṉṉē tiru uḷam tīrnta piṉṉai;
maṅkuveṉ uyirōṭu'eṉṟu, uṉ malaraṭi ceṉṉi vaittāḷ.