கம்பராமாயணம் 6089 · சுந்தர 15.81

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வைத்தபின், துகிலின் வைத்த மா மணிக்கு அரசை வாங்கி,
கைத் தலத்து இனிதின் ஈந்தாள்; 'தாமரைக் கண்கள் ஆர
வித்தக! காண்டி'என்று, கொடுத்தனன்; வேத நல் நூல்,
உய்த்து உள காலம் எல்லாம், புகழொடும் ஒக்க நிற்பான்.

பொருள் · Meaning in Tamil

வேத நல் நூல்உய்த்துள காலம் எல்லாம் - வேதங்களும் சாத்திர நல்ல நூல்களும் வழங்குவதான காலக் கணக்குகள் எல்லாம் உள்ள அளவும்; புகழொடும் ஒக்க நிற்பான் - புகழோடு கூடியிருக்கும் அனுமன்; வைத்தபின் - பிராட்டி, அவ்வாறு மலரடியைத் தன் சென்னியில் வைத்துக் கொண்ட பிறகு; துகிலின் வைத்த மாமணிக்கு அரசை வாங்க - தன் ஆடையில் முடித்து வைத்திருந்த இரத்தினங்களுக்கெல்லாம் தலைமை பெற்று உயர்ந்த சூடாமணியை அவிழ்த்து எடுத்து; கைத்தலத்து இனிதின் ஈந்தாள் - எனது கையில் விருப்பத்துடன் கொடுத்தாள்; வித்தக - அறிவிற் சிறந்த பெரியோய்; தாமரைக் கண்கள் ஆர, காண்டி என்று கொடுத்தனன் - செந்தாமரை மலர் போன்ற உனது திருக்கண்கள் மகிழும்படி பார்த்தருளுக என்று கூறி (அச்சூடாமணியை இராமபிரானிடம்) கொடுத்தான்.

பிராட்டியிடமிருந்து பெற்று வந்த சூடாமணியை அனுமன் இராமனிடம் தந்தது பற்றிக் கூறப்பட்டது. அனுமன் எப்படி, வேத நல் நூல் உய்த்துள காலத்துவம் வரை புகழோடு இருப்பானோ, அது போன்று, அவன் இப்போது, செய்த இந்த நற்செயலும் என்றும் நிற்கும் என்பது கருத்து. வேத நன்னூல் - வேதங்களாகிய நல்ல நூல்கள் என்றும் கொள்ளலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. After placing them so, she untied the king of great jewels kept in her garment
  2. and gave it gladly into my hand; Wise one, gaze on it,
  3. so your lotus eyes may be filled, he said and gave it, he who will stand with glory
  4. for as long as the good books of the Vedas run their course.

What the poem says

Aṉumaṉ presents the cūḍāmaṇi, the crest jewel Cītai had kept knotted in her garment, as a token for Irāmaṉ. The poet adds that Aṉumaṉ's fame, and this good deed, will endure as long as the Vedas last.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaittapiṉ, tukiliṉ vaitta mā maṇikku aracai vāṅka,
kait talattu iṉitiṉ īntāḷ; 'tāmaraik kaṇkaḷ āra
vittaka! kāṇṭi'eṉṟu, koṭuttaṉaṉ; vēta nal nūl,
uyttuḷa kālam ellām, pukaḻoṭum okka niṟpāṉ.