கம்பராமாயணம் 6090 · சுந்தர 15.82

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பை பயப் பயந்த காமம் பரிணமித்து உயர்ந்து பொங்கி,
மெய் உற வெதும்பி, உள்ளம் மெலிவு உறு நிலையை விட்டான்;
ஐயனுக்கு, அங்கி முன்னர் அம் கையால் பற்றும் நங்கை
கை எனல் ஆயிற்று அன்றே; கை புக்க மணியின் காட்சி.

பொருள் · Meaning in Tamil

கைபுக்க மணியின்காட்சி - (இராமபிரான்) கையில்புகுந்த அந்தச் சூடாமணியின் தோற்றம், ஐயனுக்கு அங்கி முன்னர் - அந்த இராமபிரானுக்கு, (திருமணக் காலத்தில்) அக்கினி முன்னிலையில்; அம்கையால் பற்றும் நங்கை கைஎனல் ஆயிற்று - அழகிய கையினால் பிடிக்கப்பட்ட பிராட்டியின் கையைப் போல விளங்கியது; (ஆதலின்) பயந்த காமம் பைபைய பரிணமித்து உயர்ந்து பொங்கி - அதனால்) உண்டான ஆசை உணர்ச்சி மெல்ல மெல்ல வளர்ந்து மேன்மேல் எழுதலால்; மெய் உற வெதும்பி - உடல் நன்றாய் வெப்பமுற்று; உள்ளம் மெலிவுறும் நிலையை விட்டான் - மனம் தளர்ச்சியடைகின்ற தன்மையை நீக்கினான்.

சூடாமணியைஇராமபிரான் தன் கையில் கொண்டமை, தன் திருமணக்காலத்தில் பிராட்டியின் கையைப் பற்றியது போன்றிருந்தது. அம்மகிழ்ச்சியினால், ஆசையால் வளர்ந்த மனத் துன்பம் நீங்கிற்று என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Love that had grown little by little ripened, rose and surged,
  2. and his whole body burned; then he left behind the state of a fainting heart;
  3. for to the lord, the sight of the jewel that came into his hand
  4. was like the hand of the lady that he had clasped with his lovely hand before the sacred fire.

What the poem says

Holding Cītai's jewel in his hand felt to Irāmaṉ like taking her hand at their wedding, when he grasped it before the sacred fire. His longing surged through his body, and at the same time the despair that had been weakening his heart gave way to joy.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pai paiyap payanta kāmam pariṇamittu uyarntu poṅki,
meyyuṟa vetumpi, uḷḷam melivuṟu nilaiyai viṭṭāṉ;
aiyaṉukku, aṅki muṉṉar aṅ kaiyāl paṟṟum naṅkai
kai eṉal āyiṟṟu aṉṟē; kai pukka maṇiyiṉ kāṭci.