கம்பராமாயணம் 6091 · சுந்தர 15.83

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உரோமம்பொடித்தன - (இராமபிரானுக்கு) மயிர்கள் சிலிர்த்தன; கண்ணீர் போந்து பொழிந்தன - கண்ணீர் வழிந்து பெருகின; மார்பும் தோளும் பொங்கி துடித்தன - மார்பும் தோள்களும்பூரித்துத்துடித்தன; வியர்வின் துள்ளி தோன்றின - வியர்வையின் துளிகள் உண்டாயின; மணிவாய் மடித்தது - அழகிய வாய் இதழ் மடிப்புண்டது; ஆவி வருவது போவது ஆகி மேனி தடித்தது - உயிர்வருவதும் போவதும் ஆகப் பெற்று உடல் பூரித்தது; என்னே ! - என்னவியப்பு; தன்மை தேர்வார் யார் உளர் ? - அப்போது இராமபிரான் அடைந்த நிலைமையை ஆராய்ந்து அறியவல்லார் யாரே உள்ளார்? (ஒருவரும் இல்லை என்பதாம்.)

இராமபிரானுக்குஅப்பொழுது நேர்ந்த மெய்ப்பாடுகளைத் தெரிந்து உணர்த்துவது எம்மனோர்க்கு இயலாது என்றபடி. துள்ளி-துளி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The hair on his body bristled; tears welled and poured; swelling,
  2. his chest and shoulders throbbed; drops of sweat appeared;
  3. his jewel-like lips pressed together; his breath came and went,
  4. his body swelled; ah, who is there who can fathom what he felt?

What the poem says

The poet lists Irāmaṉ's bodily signs of overwhelming emotion on receiving the jewel: hair standing on end, tears, heaving chest, sweat, trembling lips, faltering breath. Then he gives up: no one could truly describe the state Irāmaṉ was in.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṭittaṉa urōmam, pōntu poḻintaṉa kaṇṇīr, poṅkit
tuṭittaṉa mārpum tōḷum, tōṉṟiṉa viyarviṉ tuḷḷi,
maṭittatu maṇivāy, āvi, varuvatu pōvatu ākit
taṭittatu mēṉi, eṉṉē yār uḷar, taṉmai tērvār.