கம்பராமாயணம் 6093 · சுந்தர 15.85

Section சுந்தர காண்டம் / 15. திருவடி தொழுத படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டையின் அருக்கன் மைந்தன் - அப்பொழுது சூரியன்மகன் சுக்கிரீவன்; ஐய ! கேள் - (இராமபிரானை நோக்கி) ஐயனே ! கேட்டருள்வீராக!; அரிவை நம்பால் காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் - பிராட்டி, நாம் நம்மிடம் அழைத்துக் கொணர்தற்கு, எளிய தன்மையில் உள்ளாள் என்று சொன்ன அளவில்; காலம் தாழ ஈண்டு இனும் இருத்தி போலாம் என்றனன் - வீணே காலம் தாமதமாக, இங்கேயே இருக்கின்றாய் போலும் ! என்று சொன்னான்; என்ற லோடும் - என்று சொன்னவுடனே; தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து சொன்னான் - தூண் திரண்டிருப்பது போன்ற தோள்களை உடைய சுக்கிரீவன் விரைவில் எழுந்திருந்து கட்டளையிடுபவனானான்.

பொருக்கென - விரைவுக்குறிப்பு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Then the son of the Sun said, Sire, listen: the lady has become
  2. easy for us to reach; at this he said, You will still stay here, it seems,
  3. letting time slip by; and as soon as he said it,
  4. he whose shoulders are like thick round pillars sprang up and spoke.

What the poem says

Cukkirīvaṉ remarks that Cītai can now be easily rescued, and Irāmaṉ answers impatiently that Cukkirīvaṉ seems content to sit idle while time runs on. Stung, the burly monkey king leaps to his feet and begins giving orders for the army to march.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭaiyiṉ arukkaṉ maintaṉ, aiya! kēḷ, arivai nampāl
kāṇṭalukku eḷiyaḷ āṉāḷ eṉṟalum, kālam tāḻa
īṇṭu iṉum irutti pōlām eṉṟaṉaṉ; eṉṟalōṭum
tūṇ tiraṇṭu aṉaiya tōḷāṉ, porukkeṉa eḻuntu coṉṉāṉ.