கம்பராமாயணம் 6100 · சுந்தர 15.92
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரைவில்போனார் வீரரும் - விரைவில்புறப்பட்டவர்களாகிய வானரவீரர்கள் எல்லோரும்; வார் கழல் அனுமன் - நீண்ட வீரக்கழலை உடையஅனுமன்; விலங்கல் மேல் இலங்கை - திரிகூடம் என்னும்மலையின் மீதுள்ள இலங்கையில் வாழ்கின்ற; கொற்றம் கார் நிறத்து அரக்கர் என்போர் வெய்யோர் - வெற்றியையும் கரிய நிறத்தையும் உடைய அரக்கர்கள் என்று சொல்லப்படும் கொடியவர்கள் செய்யும்; பேர்வு இலா காவல் - பெயர்தல் இல்லாத காவல்; பாடும் - செய்யும் திறமும்; பெருமையும் - சிறப்பும்; அரணும் - கோட்டை முதலிய அரண்களும்; முதலிய - முதலான; கணிப்பு இலாத - அளவில்லாத பெருமைகளை எல்லாம்; சொல்ல - அவர்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டுவர; நெடிது வழி எளிதின் போனார் - நீண்ட வழியை எளிதாகக் கடந்து போனார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The heroes too went swiftly; the immovable guard
- of the cruel ones of hill-set Ilaṅkai, its greatness, its fortifications,
- its dark-hued conquering demons and all its countless other strengths
- Aṉumaṉ of the long anklets told them, and they went the long way with ease.
What the poem says
As the army marches, Aṉumaṉ entertains the monkey warriors with an account of Ilaṅkai on its mountain: its unbroken guard, its might, its fortifications and its dark victorious demons. Listening, they cover the long road without noticing its length.