கம்பராமாயணம் 6101 · சுந்தர 15.93
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்நெறி நெடிதுசெல்ல - அந்த வழி நீண்டு செல்வதால்; அரிக்குலத்து அரசனோடும் நல் நெறிக்குமரர் போக - குரங்குக் கூட்டத்துக்கு அரசனாகிய சுக்கிரீவனுடன் நல்வழியைப் பின்பற்றுபவர்களாகிய இராம இலக்குவர் செல்ல; நயந்து உடன் புணர்ந்த சேனை - விரும்பிக் கூட வந்த வானரச் சேனைகள் எல்லாம்; இன் நெடும் பழுவம் குன்றில் பகல் எலாம் இறுத்த பின்னர் - இனிய நீண்ட சோலைகளை உடைய மலைவழியில்பகல் பொழுது முழுவதையும் கழித்த பிறகு; பன்னிருபகலில் சென்று - பன்னிரண்டாம் நாளில் போய்; தென் திசைப் பரவை கண்டார் - தெற்குத்திக்கில் உள்ள கடலைக் கண்டார்கள்.
சென்ற வழிநீண்டு கொண்டிருந்தமையால், சேனை பன்னிரண்டாம் நாளில், தென் திசைக்கடலைச் சென்று அடைந்தது. இராம இலக்குவர் சுக்கிரீவனுடன் சென்றனர் என்பதாம். 'பகல் எலாம்'- பகல் நேரம்; பன்னிருபகல் - பன்னிரண்டு நாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As that road stretched long, with the king of the monkey race
- the princes of the good path went, and the army that eagerly went along with them,
- after halting all day on the sweet tall wooded hills,
- went on, and on the twelfth day they saw the southern sea.
What the poem says
Irāmaṉ and Ilakkuvaṉ, who keep to the righteous path, march with Cukkirīvaṉ and the willing army through the wooded hills. On the twelfth day they reach the shore of the southern ocean. This verse closes the Sundara Kāṇḍa.