கம்பராமாயணம் Invocation · யுத்த 0.1

Section யுத்த காண்டம் / 0. கடவுள் வாழ்த்துPoet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒன்றே என்னின் ஒன்று ஏ ஆம், பல என்று உரைக்கின் பல ஏ ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆம் ஏ ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை! நமக்கு இங்கு என் ஓ! பிழைப்பு? அம்மா!

பொருள் · Meaning in Tamil

ஒன்றே என்னின் ஒன்றேயாம் - ஒன்று என்று கூறினால் ஒன்றேயாகும்; பல என்று உரைக்கின் பலவே ஆம் - பல என்று கூறின் பலவாகும்; அன்றே என்னின் அன்றே ஆம் - இத்தன்மை உடையதல்ல என்று கூறினால் அவ்வாறே ஆகும் ; ஆமே என்னின் ஆமே யாம் - இன்ன தன்மை உடையது என்று கூறினால் அந்தத்தன்மை உடையதாயிருக்கும்; இன்றே என்னின் இன்றே யாம் - இல்லை என்று சொன்னால் இல்லாததாகும்; உளது என்று உரைக்கின் உளதேயாம் - உள்ளது என்று கூறினால் உள்ளதே ஆகும்; நன்றே நம்பி குடி வாழ்க்கை - இப்படிப்பட்ட இறைவனது நிலை பெரிதாயுள்ளது; நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா - அற்ப அறிவுடைய சிற்றறிவினராகிய நாம் இவ்வுலகில் இறை நிலையை அறிந்து உய்வு பெறும் வழி யாது?

'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடைய பரமன் ஒருவனே ஆதலின் 'ஒன்றே என்னின் ஒன்றே யாம்' என்றார். அந்த ஒரு பரம் பொருளே, 'திட விசும்பு, எரி, வளி, நீர் நிலம் இவை மிசைப்படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தோறும், உடல்மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துள்ளதாதலின், "பல என்று உரைக்கில் பலவே ஆம்" என்றார். 'ஒன்றெனப்பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்” என்று திருவாய் மொழி (2110) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. கண்ணுக்குப் புலப்படாத அவ்விறைவனைக் காணப்படும் பரிதி, மதி போன்றவற்றைக் காட்டி "இதுவல்ல, இதுவல்ல” என்று சுட்டி அறிவிக்க வேண்டியிருப்பதால் "அன்றே என்னின் அன்றே ஆம்” என்றார் அப்பரமனின் இயல்பை, காணப்படும் பொருள்களான சூரியன், சந்திரன் போன்றவைகளின் ஒளி, குளிர்ச்சி ஆகியவை, பரம்பொருளின் இயல்பில் சிறிதளவே உடையதாயிருத்தலைச் சுட்டி, இதுபோன்ற பல கோடி மடங்கு ஒளியுடையவன் இறைவன் எனக் கூறி அறிவிக்கலாமென்பதால் "ஆமே என்னின் ஆமேயாம்" என்றார் கண்ணுக்குப் புலனாகாத தன்மையுடையது பரம்பொருள் என்பதால் "இன்றே என்னின் இன்றே யாம்” என்றார். ஆராய்ந்தறிந்த சான்றோர்களின் அனுபவ மொழிகளாலும், நூலறிவினாலும் பரம்பொருள் உண்டு என்பதை உணரலாமென்பதால் 'உளதென்றுரைக்கில் உளதேயாம்' என்றார். "உருவென அருவென உளதென இலதென, அருமறை இறுதியும் அறிவரு நிலையினை” எனத் திருவரங்கக் கலம்பகம் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. "உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்” என்ற திருவாய் மொழி (2090) நினைவு கூரத்தக்கது. "நன்றே நம்பி குடிவாழ்க்கை" என்பது, உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வரிது என்றதிருவாய் மொழிக் கருத்தை (2100) உணர்த்தும். நன்று - பெரிது. "நன்று பெரிதாகும்” என்பது தொல்காப்பியம். பிழைப்பு: உய்யும் நெறி, நம்பி குடிவாழ்க்கை - இறைவன் நிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Say it is one, and it is one; say it is many, and it is many;
  2. say it is not this, and it is not; say it is this, and it is;
  3. say it is not, and it is not; say that it is, and it is;
  4. how great is the household life of the Lord! What way of escape is there here for us? Ah!

What the poem says

The invocation that opens the Yuddha Kāṇḍa, the book of the war. The poet meditates on the paradox of the supreme being: it is one, since one Lord creates, sustains and ends all worlds, yet many, since it pervades every element as life pervades a body. It can be described only by saying not this, not this, yet also by comparison with the sun and moon; it is invisible and so seems not to exist, yet the sages and scriptures affirm that it is.

The commentary compares similar ideas in the Tiruvāymoḻi and the Tiruvaraṅkak Kalampakam. Faced with a reality so vast, the poet asks how small minds like ours can ever know it and be saved.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟē eṉṉiṉ oṉṟē ām, pala eṉṟu uraikkiṉ palavē ām,
aṉṟē eṉṉiṉ aṉṟē ām, āmē eṉṉiṉ āmē ām,
iṉṟē eṉṉiṉ iṉṟē ām, uḷatu eṉṟu uraikkiṉ uḷatē ām,
naṉṟē nampi kuṭi vāḻkkai! namakku iṅku eṉṉō piḻaippu? ammā!