கம்பராமாயணம் 6107 · யுத்த 1.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொடிப் பவளம் - கடற்கரையிலே படர்ந்துள்ள கொடிப்பவளம்; சிலை மேல் கொண்ட - வில்லைத் தாங்கி இருக்கின்ற; திரு நெடும் தோட்கு - அழகிய நீண்ட தோளுக்கு; உவமை மலையும் சிறிது ஏய்ப்ப - மலையும் சிறிது உவமையாகும்படி; நிலை மேற்கொண்டு - நிற்கும் நிலையினை மேற்கொண்டு; மெலிகின்ற நெடியோன்தன் முன் - மெலிகின்ற நீண்டவனான இராமபிரான்முன்; படி ஏழும் - ஏழுலகங்களும்; தலைமேல் கொண்ட கற்பினாள் - தலைமேல் கொண்டு போற்றும் கற்புடைய சீதா பிராட்டியின்; மணிவாய் என்ன - அழகிய வாயைப்போல; தனி தோன்றி - தனியே தோற்றமளித்து; கொலை மேற்கொண்டு - கொலைத் தொழில் மேற்கொண்டு, உயிர்குடிக்கும் கூற்றம் கொல்லோ - அவனது ஆயுளைப் பருகும் எமனோ?
தோளின் இளைப்பு மலைக்குவமையாம்படி ஆயிற்று என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the tall one, whose fair long shoulders that bear the bow have so wasted
- that even a mountain now in some small way resembles them, as he stands and weakens,
- the creeper coral, appearing alone like the jewelled lips
- of her whose chastity the seven worlds bear on their heads, is it Death, bent on killing, come to drink his life?
What the poem says
Irāmaṉ's shoulders were once beyond any comparison; now they have wasted so much that a mountain could almost be likened to them. The red coral on the beach reminds him of Cītai's lips, and the reminder is so painful that the coral seems to be Death come to take his life.