கம்பராமாயணம் 6106 · யுத்த 1.5

Section யுத்த காண்டம் / 1. கடல் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நென்னல் கண்ட திருமேனி - நேற்றுப் பார்த்த அழகிய உடம்பு; இன்று பிறிதாய் - இன்று வேறுபட்டதாகி; நிலை தளர்வான் தன்னைக் கண்டும் - தனது நிலை தளர்பவனாகிய இராமபிரானது நிலைமையைப் பார்த்தும்; இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய் - மனம் இரங்காமல் தனியே நின்று கதறுகின்ற பெரிய கடலின்கண்; பின்னல் திரை மேல் - பின்னி இணைந்தியங்கும் அலைகளின்மேல்; தவழ்கின்ற பிள்ளைத் தென்றல் - தவழ்ந்து வருகின்ற சிறிய தென்றலானது; கள் உயிர்க்கும் - தேனைப் பிலிற்றும்; புன்னைக் குறும்பூ நறுஞ்சுண்ணம் - புன்னையினது சிறியபூவின் மணமுடைய சுண்ணத்தை, பூசாது ஒரு கால் போகாது - இராமன் மீது ஒரு காலும் பூசாமல் போகாது (பூசியே செல்லும்.

நென்னல் - நேற்று. பிள்ளைத்தென்றல் என்பதற்கேற்பத் தவழ்ந்து என்று கூறினார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the one who wavers, his fair body that was seen yesterday changed today,
  2. the great sea, which sees him yet feels no pity and roars on alone,
  3. sends the infant southern breeze crawling over its braided waves
  4. never once to pass without smearing him with the fragrant pollen of the small honey-dripping puṉṉai flowers.

What the poem says

Irāmaṉ grows visibly thinner day by day, yet the ocean shows no pity. The little southern breeze, pictured as a baby crawling over the waves, keeps dusting him with the scent of puṉṉai blossoms, which only sharpens his longing for Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1neṉṉal kaṇṭa tirumēṉi iṉṟu piṟitu āy, nilai taḷarvāṉ
taṉṉaik kaṇṭum iraṅkātu taṉiyē kataṟum taṭaṅ kaṭalvāy
piṉṉal tiraimēl tavaḻkiṉṟa piḷḷait teṉṟal, kaḷ uyirkkum
puṉṉaik kuṟum pū naṟuñ cuṇṇam pūcātu orukāl pōkātē.