கம்பராமாயணம் 6105 · யுத்த 1.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வழிக்கும் கண்ணீர் அழுவத்து - வடிக்கும் கண்ணீர்க் கடலிடையே; வஞ்சி அழுங்க - வஞ்சிக்கொடி போன்ற சீதை வருந்துவதால், வந்து அடர்ந்த - வந்து பொருந்திய; பழிக்கும் காமன் பூங்கணைக்கும் - பழிக்கும் மன்மதனது மலர் அம்புகளுக்கும்; பற்றா நின்றான் - இலக்காகி நின்ற இராமபிரானுடைய,; பொன் தோளை - அழகிய தோள்களை; கொழிக்கும் கடலின் - ஆர்ப்பரிக்கின்ற கடலின்; நெடுந்திரைவாய் - பெரிய அலைகளினின்று கொண்டு; தென்றல் தூற்றும் குறுந்திவலை - தென்றல் காற்று தூற்றும் சிறிய நீர்த்திவலைகள்; சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில் - சுழன்று எரிகின்ற கொல்லனது உலையிலிருந்து எழுந்து; துள்ளும் பொறியின் சுடும் - துள்ளி வரும் நெருப்புப் பொறி போலச்சுடும்.
வழிக்கும் - வடிக்கும் அழுவம்- கடல் அழுங்க - வருந்த பற்று- இலக்கு சுழிக்கும்- சுழன்று எரியும் கொழிக்கும் - ஆர்க்கும் வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த பழியாவது "மனைவியைப் பாதுகாக்கத் தவறிவிட்டானே” என்று உலகம் கூறும் பழிச் சொல்லாம். அன்னோ-அந்தோ, இரக்கக் குறிப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Upon him who, while the creeper-like lady grieves in a flood of streaming tears,
- stood as the target of the blame that came crowding and of Kāmaṉ's flower arrows, upon his golden shoulders
- they burn like the sparks that leap from the roaring forge of a smith whose fire whirls, alas!
- the fine spray the southern breeze flings from the long waves of the churning sea.
What the poem says
On the shore Irāmaṉ suffers doubly: from the shame of having failed to protect his wife, while she weeps in captivity, and from the arrows of Kāmaṉ, the god of love. Even the cool sea spray carried by the southern breeze scorches his shoulders like sparks flying from a blacksmith's furnace.