கம்பராமாயணம் 6109 · யுத்த 1.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறிகடல் - மடிந்து எழும் அலைகளை உடைய கடலே! இந்து அன்ன நுதல் பேதை - பிறைச் சந்திரனைப் போன்ற நெற்றி உடைய சீதை; இடர் நீங்கா இருந்தாள் - நீங்காத துன்பத்திலே இருந்தாள்; கொடியேன் தந்த பாவை- கொடியேனாகிய நான் பெற்ற பாவை போன்றவரும்; தவப் பாவை - தவப் பயனால் பிறந்த வருமாகிய சீதை; தனிமை தகவோ? - (அரக்கருக்கிடையே தனி இருந்து வருவது தகுமோ? எனத் தளர்ந்து - என்று மனம் தளர்ந்து; சிந்துகின்ற நறுந்தரளம் - சிந்துகின்ற நல்ல முத்துக்களாகிய; கண்ணீர் ததும்பி - கண்ணீர் பொங்கி திரைத்து எழுந்து வந்து - அலைகளாகிய கைகளை விரித்துக் கொண்டு எழுந்து வந்து; வள்ளல் மலர்த் தாளில் - வள்ளலாகிய இராமபிரானது மலர்போன்ற திருவடிகளில்; வீழ்வது ஏய்க்கும் - விழுந்து முறையிடுவதை நிகர்க்கும்.
பாற்கடலில் பிறந்த திருமகளே சீதையாதலால் கடல் 'கொடியேன் தந்த பாவை' எனக் கூறியது. தன் மகள்துயரத்தால் வருந்தக் கண்டும் தான் எதுவும் செய்ய இயலாமையைச் சுட்ட 'கொடியேன்' எனக் கூறியது பொருத்தமே. தரளக் கண்ணீர் உருவகம். இந்து-பிறைச்சந்திரன் இது முதல் மூன்று பாடல்கள் கடலின் தோற்றத்தை விவரிப்பவையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lady with a brow like the crescent moon lives in unending sorrow; the doll born to cruel me,
- the doll born of austerity, is it fit that she be alone? So, despairing,
- brimming with tears of fragrant pearls that it sheds, it rose in waves
- and came, and seems to fall at the flower feet of the generous lord, the rolling sea.
What the poem says
The ocean is pictured as a grieving parent. Since Cītai is Lakṣmī, who was born from the ocean of milk, the sea speaks of her as the daughter born to cruel me, cruel because it can do nothing to help her. Weeping pearls, it raises its waves like arms and throws itself at Irāmaṉ's feet in appeal.
This and the next two verses describe the appearance of the sea.