கம்பராமாயணம் 6110 · யுத்த 1.9

Section யுத்த காண்டம் / 1. கடல் காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றை
துள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,
வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு
அள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி.

பொருள் · Meaning in Tamil

அணி ஆழி - அழகிய அந்தக் கடல்; வெதும்பும் அண்ணல் திருமேனிக்கு - (சீதையின் பிரிவால்) வெதும்பும் இராமன் திருமேனியில் (அந்த வெப்பம் தீர); அள்ளி அப்ப- அள்ளிப் பூசுவதற்காக; பள்ளி அரவின் பேருலகம் - திருமாலின் படுக்கையாகிய பாம்பின் முடிமீது தங்கிய பெரிய உலகமே; பசும் கல்லாக - சந்தனம் அரைக்கும் கல்லாக; பனிக்கற்றைத் துள்ளி நறுமென் புனல் தெளிப்ப - திரண்ட பனித்துளிகளாகிய மெல்லிய நீரைத் தெளித்த; தூநீர் குழவி முறை சுழற்றி - தூய நீராகிய குழவியை முறையே சுழற்றி; வெள்ளி வண்ண நுரைக் கலவை - வெண்ணிறம் கொண்ட நுரையாகிய சந்தனத்தை; திரைக் கரத்தால் - அலைகளாகிய கைகளால்; அரைப்பது ஏய்க்கும் - அரைப்பது போலத் தோன்றும்.

கடல் - சந்தனம் அரைப்பவன், அலைகள் - கைகள் உலகம் - சந்தனம் அரைக்கும் கல், பனி - நீர் தெளிப்பவன், பனித்துளி - நீர்த்துளி மறிந்துவரும் கடல் நீர் - குழவி; நுரை - கலவைச் சந்தனம் என உருவகித்திருப்பது சுவைத்து மகிழ்தற்குரியது பள்ளி அரவு-ஆதி சேடன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great earth on the serpent couch as the green grinding stone, with clusters of dew
  2. sprinkling drops of fragrant soft water, turning the pure water as the roller in due order,
  3. the silvery foam as sandal paste, to scoop up and smear on the burning body of the lord,
  4. the ornate sea seems to be grinding it with its wave-hands.

What the poem says

An extended metaphor. To cool Irāmaṉ's body, fevered by separation, the sea seems to be preparing sandal paste. The earth, which rests on the serpent Ādiśeṣa, is the grinding stone; dew sprinkles the water; the rolling sea water is the roller; the white foam is the paste; and the waves are the hands that grind it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paḷḷi araviṉ pēr ulakam pacuṅ kal ākap paṉik kaṟṟait
tuḷḷi naṟu meṉ puṉal teḷippat tū nīrk kuḻavi muṟai cuḻaṟṟi,
veḷḷi vaṇṇa nuraik kalavai vetumpum aṇṇal tirumēṉikku
aḷḷi appat tiraik karattāl araippatu ēykkum aṇi āḻi.