கம்பராமாயணம் 6164 · யுத்த 2.52

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆசு இல் பர தாரம் அவை அம் சிறை அடைப்பேம்
மாசு இல் புகழ் காதல் உறுவேம்; வளமை கூரப்
பேசுவது வீரம் இடை பேணுவது காமம்;
கூசுவது மானிடரை; நன்று நம கொற்றம்.

பொருள் · Meaning in Tamil

ஆசு இல் பரதாரம் அவை - ஒரு குற்றமும் இல்லாத வேறு ஒருவன் மனைவியை, அஞ்சிறை அடைப்பேம்- அழகிய சிறையிலே அடைத்து வைப்போம், மாசு இல் புகழ் காதல் உறுவேம் - குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; வளமை கூர - பெருமை மிக; பேசுவது மானம்- பேசுவதோ வீர உரைகள்; இடை பேணுவது காமம் - அதற்கிடையிலே விரும்புவது காமம், கூசுவது மானுடரை - அஞ்சுவது மானிடர்களைப் பார்த்து; நம் கொற்றம் நன்று - நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.

ஆசு, மாசு-என்பன குற்றம் என்ற பொருள் உடையவையாம். பரதாரம் - வேறு ஒருவனது மனைவி. அம்சிறை-அழகிய சிறை. சிறையின் கொடுமையைக் குறித்து நின்றது. 'பரதாரம்' அவை எனப் பன்மையில் கூறியது. பல பெண்களை விரும்பியவன் என்பதைச் சுட்டிக் காட்டி நின்றது போலும். கொற்றம்-வெற்றி, வீரமுமாம். 'நன்று' இகழ்ச்சி குறித்து நின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. We lock the wives of others, who are without fault, in a lovely prison,
  2. yet long for stainless fame; to swell our greatness
  3. what we speak is honour, what we cherish in between is lust;
  4. what we shrink from is men; fine indeed is our valour!

What the poem says

Kumpakaruṇaṉ's sarcasm grows sharper. The demons imprison innocent wives yet crave a spotless name; they talk proudly of honour while indulging lust; and now they cower before mere men. The plural wives hints at Irāvaṇaṉ's many past abductions.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ācu il para tāram avai am ciṟai aṭaippēm
mācu il pukaḻ kātaluṟuvēm; vaḷamai kūrap
pēcuvatu māṉam iṭai pēṇuvatu kāmam;
kūcuvatu māṉuṭarai; naṉṟu nama koṟṟam.