கம்பராமாயணம் 6210 · யுத்த 2.98

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இன்னம் ஒன்று உரைசெய்வான்,'இனிதுகேள், எம்பிரான்! இருவர் ஆய
அன்னவர் தம்மொடும் வானரத் தலைவராய் அணுகி நின்றார்,
மன்னும் நம் பகைஞராம் வான் உளோர்; அவரோடும் மாறுகோடல்
கன்னம் அன்று;'இது நமக்கு உறுதி'என்று உணர்தலும் கருமம் அன்றால்.

பொருள் · Meaning in Tamil

எம்பிரான்! - எமது தலைவனே! இன்னம் ஒன்று உரை செய்தால் - இன்னும் ஒன்று கூறுவதானால்; இனிது கேள் - அதனை இனிதே கேட்பாயாக; இருவராய அன்னவர் தம்மொடும் - இருவரான ராம, இலக்குவர்களோடும்; மன்னும் நம் பகைஞர் ஆம் வானுளோர் - நிலைபெற்ற நமது பகைவர்களாகிய விண்ணுளோர்; வானரத் தலைவராய் அணுக நின்றார் - வானரத் தலைவர்களாக நெருங்கி நின்றனர்; அவரொடு மாறுகோடல் - அவர்களோடு மாறுபாடு கொள்ளுதல்; கன்மம் அன்று - காரியம் ஆகாது; இது நமக்கு உறுதி என்று உணர்தலும் கருமம் அன்று - இவ்வாறு பகைத்துக் கொள்ளுதல் உறுதி என உணர்வதும் செய்யத் தக்கதல்ல.

தேவர்களே வானரர்களாக வந்தனர் என முன்னர் குறிக்கப்பட்டுள்ளது. (199) மாறுகோடல்-பகைத்துக் கொள்ளுதல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If I may say one thing more, listen kindly, my lord: with those two
  2. stand the gods, our lasting enemies, close by as chiefs of the monkeys.
  3. To make enemies of them is no work for us; nor is it right
  4. to imagine that this course is good for us.

What the poem says

Vīṭaṇaṉ reveals that the monkey chiefs are gods born on earth to help Irāmaṉ, the demons' old enemies in a new form. To go to war with this alliance is unwise, and to persuade oneself that it is the right course is a mistake.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉam oṉṟu urai ceytāl, 'iṉitu kēḷ, empirāṉ! iruvar āya
aṉṉavar tammoṭum vāṉarat talaivarāy aṇuka niṉṟār,
maṉṉum nam pakaiñar ām vāṉuḷōr; avaroṭum māṟukōṭal
kaṉmam aṉṟu; 'itu namakku uṟuti' eṉṟu uṇartalum karumam aṉṟāl.