கம்பராமாயணம் 6209 · யுத்த 2.97

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயா - தலைவனே! சிந்த மாநாகரைச் செருமுருக்கிய - சிறந்த தேவர்களை எல்லாம் சிதறும்படி போரில் வலிமை அழித்த; கரன், திரி சிரத்தோன் - கரனும் திரிசிரனும்; முந்த மான் ஆயினான் - முன்னே மாய மானாக வந்த மாரீசனும், வாலியே முதலினோர் - கிட்கிந்தை மன்னனான வாலி முதலானவர்களும்; முடிவு கண்டால் - இராம லக்குவரால் இறந்தழிந்தார்கள் என்பதை அறிந்தால்; அந்த மான் இடவனோடு - மான் போன்ற உமையவளை இடப்புறத்தில் கொண்ட சிவபிரானும்; ஆழிமாவலவனும் - சக்கரப் படையை உடைய வல்லவரான திருமாலும்; இந்த மானிடவராம் - இந்த மனிதர்களாகிய; இருவரோடு - இராமன், இலக்குவன் என்ற இருவருடனே; எண்ணலாம் ஒருவர் யாரே - நிகராக எண்ணத் தகுந்த ஒருவர் யார் இருக்கிறார்கள்?

நாகர்-தேவர்கள். சிந்த-சிதறியோட. செரு-போர். முருக்கிய- வலிமையை அழித்த. மான் இடவன் மானை இடக்கரத்தில் ஏந்திய சிவன் எனவும் கொள்ள இடமுண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Karaṉ and the three-headed one, who broke the might of the great gods and scattered them in war,
  2. he who earlier became a deer, and Vālī and the others: when we see how they ended,
  3. then, my lord, the one with the deer on his left, the great lord of the discus, and the others:
  4. who could be counted alongside these two who are men?

What the poem says

Vīṭaṇaṉ lists the strong demons and warriors the brothers have already killed: Karaṉ, Tiricirā, Mārīcaṉ who took the shape of the golden deer, and Vālī. After that, not even Śiva, who holds a deer and has Umā at his left side, or Viṣṇu with his discus, could be called their equal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cinta mā nākaraic ceru murukkiya karaṉ, tiricirattōṉ,
munta māṉ āyiṉāṉ, vāliyē mutaliṉōr muṭivu kaṇṭāl,
anta māṉ iṭavaṉōṭu āḻi mā valavaṉum piṟarum, aiyā!
inta māṉiṭavarām iruvarōṭu eṇṇal ām oruvar yārē?