கம்பராமாயணம் 6208 · யுத்த 2.96
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நிருதர் வாயினும் பல்லினும் புனல் வறந்து உலறினார்- அரக்கர்கள் வாயிலும் பல்லிலும் நீர் வறண்டு போய் பொலிவிழந்தனர்; வைகும் பேயினும் பெரிய பேம் நரிகளும் புரிதரும் - தங்கியிருக்கும் பேய்களும் அவற்றைவிடப் பெரியனவாகிய அச்சம் தரும் நரிகளும் பல்கிப் பெருகுகின்றன; பிறவும் எண்ணின் - வேறும் நினைப்போமாயின்; கோயிலும் நகரமும் - நமது அரண்மனையும், இலங்கைமாநகரமும்; மடநலார் குழலும் - இளம் பருவத்தினரான நமது மகளிரின் கூந்தலும்; நம் குஞ்சியோடும் - நமது தலைமுடியுடனே; தீயின் வெந்திடும் - நெருப்பிலே வெந்து கருகும்; அலால் ஒரு நிமித்தம் - இவையல்லாத ஒரு நல்ல நிமித்தம்; பெறும் திறனும் உண்டோ - பெறும் வகை நமக்குள்ளதோ?
வறந்து - வற்றிப்போய். உலறினார் - உலர்ந்து பொலிவிழந்தார். கண்ணும் முகமும் உலறி (சீவக. 2996) கோயில்-அரண்மனை. குஞ்சி-ஆண்கள் தலைமயிர். பேம்- அச்சம். மடம்- இளமை. நல்லார் என்பது 'நலார்' என நின்றது தொகுத்தல் விகாரம். 'உண்டோ' ஓகாரம் எதிர்மறைப் பொருள் தந்து நின்றது; இல்லை என்பது பொருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The demons' mouths and teeth have gone dry and parched;
- ghosts and jackals more fearsome than ghosts swarm and multiply; and if we count the rest,
- the palace, the city, the hair of our young women and our own locks
- burn in fire; is there any good omen to be had apart from these?
What the poem says
More omens: the demons' mouths are dry with dread, ghosts and jackals multiply, and fire seems to break out in the palace, the city and even people's hair. The question at the end expects the answer that there is no good sign at all.