கம்பராமாயணம் 6207 · யுத்த 2.95
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சொலத்தகாத்துன்னிமித்தங்கள் - சொல்லி முடியாத எத்தனையோ கெட்ட சகுனங்கள்; எங்கணும் வரத் தொடர்வ - எங்கும் தொடர்ந்து காணப்படுகின்றன; ஒன்னார் வெலத்தகா - பகைவர்களால் வெல்ல முடியாதவையான; விடாத குலத்தகால் வயநெடுங்குதிரையும் - நீங்காத சிறந்த குலப்பிறப்பை உடைய வலி சிறந்த நமது குதிரைகளும்; அதிர் குரல் குன்றும் - பகைவர் அஞ்சும்படி பிளிறும் குரல் வாய்ந்த மலை போன்ற நமது யானைகளும்; அமரரும் அவுணரும் - தேவர்களும் அரக்கர்களும்; செருவில் விட்டன - செய்த போரில் பங்கு கொண்ட அவை; நம்மனையிடை - நமது இல்லங்களிலே; வலத்தகால் முந்துறத் தந்து புகும் - வலது காலை முன்னே வைத்துப் புகுகின்றன.
குலம்-நல்ல குடிப்பிறப்பு. வயம்-வலிமை. சொலத்தகா - வெலத்தகா என்பன சொல்லத்தகா, வெல்லத்தகா என்பதன் தொகுத்தல் விகாரம். யானையும், குதிரையும் வலக் காலை முன்னே தூக்கி வைத்து வீட்டுக்குள் புகுவது துர்நிமித்தம் என்பது உலக வழக்காகும். அடுத்தபாடல்களிலும் பல துன்னிமித்தங்கள் கூறப்படுகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ill omens that cannot be told follow one after another everywhere;
- our tall, strong horses of unbroken noble breed, which enemies cannot overcome,
- which fought in the wars of gods and asuras, and our elephants like mountains with thundering voices,
- even today enter our houses setting the right foot first.
What the poem says
Vīṭaṇaṉ begins a list of bad omens seen in Ilaṅkai. Popular belief held it unlucky for a horse or elephant to step into a house with its right foot first, and this is now happening with the demons' own war beasts, veterans of the battles between gods and asuras.