கம்பராமாயணம் 6206 · யுத்த 2.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சிந்து முந்து உலகினுக்கு - (நமக்குப் பயந்து) கடல் பொங்கி எழும் இந்த உலகத்துக்கு அப்பால்; இறுதி புக்கு - முடிவிடமான கடைசியில் சென்று; உரு ஒளித்து - தங்கள் வடிவத்தை ஒளித்து, வேற்றுருவத்தில் வாழ்ந்து; உலைதல் செய்வார் - வருந்தித் தவித்தவர்கள்; இந்துவின் திருமுகத்து இறைவி - மதியைப்போன்ற திருமுகத்தை உடைய தெய்வமகளான சீதாபிராட்டி; நம் உறையுளாள் - நமது உறைவிடமான இலங்கையில் இருக்கிறாள்; என்றலோடும் - என்று தெரிந்தவுடன்; அந்தகன் முதலினோர் - எமன் முதலானவர்களும்; அமரரும் முனிவரும் - தேவர்களும், முனிவர்களும்; பிறரும் - மற்றுமுள்ளவர்களும் (கின்னரர் முதலானோர்); அஞ்சார் - அச்சமில்லாதவர்களாக; வந்து தம் உலகமும் வானமும் கண்டு - வந்து, தங்கள் விண்ணுலகத்தையும் வானத்தையும் பார்த்து விட்டு; உவந்து அகல்வர் - மகிழ்ந்து செல்வதாயினர்.
சிந்து-கடல். முந்துதல்-பொங்குதல். இந்து-சந்திரன். அந்தகன்- எமன். பிறர் கின்னரர் முதலானோர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who fled beyond the world where the sea surges, to its farthest end,
- hiding their forms and wandering in distress, as soon as they heard
- that the goddess with a face like the moon is dwelling in our home,
- Death and the rest, gods, sages and others too, now come without fear, see their own worlds and sky, and leave rejoicing.
What the poem says
Vīṭaṇaṉ says the gods and sages, including Yama, the god of death, had fled in disguise to the edge of the world for fear of Irāvaṇaṉ. Now that they know Cītai is held in Ilaṅkai, which they take as a sign of the demons' coming fall, they boldly return to visit their own heavenly realms.