கம்பராமாயணம் 6205 · யுத்த 2.93

Section யுத்த காண்டம் / 2. இராவணன் மந்திரப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புகல் மதித்து உணர்கிலாமையின் நமக்கு எளிமை சால் பொறுமை கூர
நகல் மதிக்கில, மறுப்பொலிய வாள் ஒளி இழந்து உதயம் நண்ணும்
பகல் மதிக்கு உவமை ஆயின எலாம் இரவு கால் பருவ நாளின்
அகல் மதிக்கு உவமையாயின தபோதனர் உளார் வதனம் அம்மா!

பொருள் · Meaning in Tamil

தபோதனர் உளார்வதனம் - தவச்செல்வர்களான முனிவர்களது முகங்களெல்லாம்; புகல்மதித்து உணர்கிலாமையின்- முன்பு, தங்களுக்குப் பாதுகாப்பு எதுவென மதித்து அறியாமையால்; நமக்கு எளிமை சால் - நமக்கு எளியவர்களாகவும்; பொறைமை கூர - மிகுந்த பொறுமை உள்ளவர்களாகவும்; நகல் மதிக்கில - மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும்; மறுப்பொலிய வாள் ஒளி இழந்து - கறை விளங்க, நல்ல ஒளியை இழந்து; உதயம் நண்ணும் - சூரியன் உதித்தபின் காணப்படும்; பகல் மதிக்கு உவமையாம் - பகலில் தோன்றும் மதியை ஒத்துக் காணப்பட்டன; விபுதராம் - தவமுனிவர்களாகிய அவர்கள் (முகங்கள்); இரவு கால் பருவ நாளின் - இரவுக்காலத்தில் பெளர்ணமியில் தோன்றும்; அகல் மதிக்கு உவமை ஆயின - முழு மதிக்கு உவமை ஆயின.

புகல்-பாதுகாப்பான இடம். நகல் - மகிழ்ச்சி. பருவ காலம்-பெளர்ணமி நாள். வதனம்-முகம். தபோதனர்; விபுதர் -முனிவர்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before, not knowing where to find refuge, they were meek before us and full of patience,
  2. without a smile, their bright glow lost, their stains showing, like the moon
  3. that lingers by day after the sun has risen; but now, ah, the faces of the sages
  4. have become like the broad full moon on the night of its season.

What the poem says

Another sign of the times: the faces of the ascetics. While they had no protector, they were pale and joyless before the demons, like the washed-out moon seen in daylight. Now that Irāmaṉ has come, their faces shine like the full moon at night.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pukal matittu uṇarkilāmaiyiṉ namakku eḷimai cāl poṟaimai kūra
nakal matikkila, maṟup poliya vāḷ oḷi iḻantu utayam naṇṇum
pakal matikku uvamai ām viputarām iravu kāl paruva nāḷiṉ
akal matikku uvamai āyiṉa tapōtaṉar uḷār vataṉam ammā!