கம்பராமாயணம் 625 · பால 10.73

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வண்ணம் மாலை - நிறமுள்ள ஒளிமிக்க மாலைப் பொழுதாகிய; கை பரப்பி - (தனது) கையை விரித்து நீட்டி; உலகை வளைந்த - உலகினைச் சூழ்ந்துள்ள; இருள் எல்லாம் - இருள் முழுவதையும்; உண்ண எண்ணி - உண்ணுவதற்கு எண்ணி; தண் மதியத்து உதயத்து - குளிர்ந்த சந்திரனின் உதய காலத்தில்; எழுந்த - வெளிப்பட்ட; நிலாக் கற்றை - நிலாத் தொகுதியானது; விண்ணும் மண்ணும் - விண்ணுலகமும் மண்ணுலகமும்; திசை அனைத்தும் - எல்லாத் திசைகளுமாகிய உலகம் முழுவதையும், விழுங்கிக்கொண்ட - (தன்னுடையதாக்கி) விழுங்கிய; விரி நல் நீர் - பரவிச் சிறந்த நீர் வளமுள்ள; பண்ணை - கழனிகள் வாய்ந்த; வெண்ணெய்ச் சடையன் தன் - திருவெண்ணெய் நல்லூரில் வாழ்கிற சடையப்ப வள்ளலின்; புகழ்போல் - புகழைப்போல; எங்கும் பரந்துளது - எங்கும் பரவியுள்ளது.

இருள் தொகுதியாகிய அரக்கர் கூட்டம் மாலைக் காலமாகிய கையைப்பரப்பி உலகம் முழுவதையும் வளைத்துக் கொண்டது. அவ் விருளை ஒழிக்கக் கருதிய சந்திரனின் நிலாக் கற்றையாகிய படை சடையன் புகழ் போல எங்கும் பரவியது என்றார். புகழை வெண்ணிறம் உடையதாக வருணித்தல் கவி மரபு. சடையப்ப வள்ளல் - சோழ நாட்டு வெண்ணெய் நல்லூர்த் தலைவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Spreading its hands of coloured evening, meaning to devour
  2. all the darkness that had encircled the world, the sheaf of moonlight that rose at the cool moon's rising
  3. swallowed sky and earth and all the quarters, and like the fame of Caṭaiyaṉ of Veṇṇey,
  4. rich in wide good waters and fields, it has spread everywhere.

What the poem says

The moonlight spreads over the whole world, swallowing the darkness that had closed in with evening. Its whiteness and its reach are compared to the fame of Caṭaiyaṉ, lord of Tiruveṇṇeynallūr in the Chola country, Kampaṉ's patron. Poets traditionally describe fame as white.

Here the poet pays his customary tribute to his benefactor. The commentary pictures the darkness as an army of demons hemming in the world, and the moonbeams as the force sent to destroy it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇṇa mālaik kaiparappi, ulakai vaḷainta iruḷ ellām
uṇṇa eṇṇit, taṇ matiyattu utayattu eḻunta nilāk kaṟṟai,
viṇṇum maṇṇum ticaiaṉaittum viḻuṅkikkoṇṭa, viri nalnīrp
paṇṇai veṇṇeyc caṭaiyaṉtaṉ pukaḻpōl, eṅkum parantuḷatāl.