கம்பராமாயணம் 624 · பால 10.72

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1புள்ளிக் குறி இட்டு என ஒண் மீன் பூத்த வானம் பொலி கங்குல்
நள்ளில் செறிந்த இருள் பிழம்பை நக்கி நிமிர்ந்த நிலா கற்றை,
கிள்ளைக் கிளவிக்கு என் ஆம் கொல்! கீழ் பால் திசையின் மிசை வைத்த
வெள்ளிக் கும்பத்து இளம் கமுகின் பாளை போன்று விரிந்து உளது ஆல்.

பொருள் · Meaning in Tamil

புள்ளிக்குறி இட்டு என - புள்ளிகளை அடையாளமாக இட்டாற்போல; ஒள்மீன் பூத்த - ஒளிமிக்க நட்சத்திரங்கள் விளங்குகின்ற, வானம் - ஆகாயத்திலே; பொலி - விளங்கும்; கங்குல் நள்ளில் - இரவின் நடுப்பொழுதில்; செறிந்த இருள் பிழம்பை - திரண்ட இருள் கூட்டத்தை; நக்கி நிமிரும் - உண்டு சிறக்கின்ற; நிலாக் கற்றை - நிலாத் தொகுதியானது; கீழ்ப் பால் திசையின் - கிழக்குத் திக்கிலே; மிசை வைத்த - மேலிடமாக வைக்கப்பட்ட; வெள்ளிக் கும்பத்து - வெள்ளிமயமான பூரணகும்பத்தின் பக்கத்திலுள்ள; இளங் கமுகின் பாளை போன்று - இளங் கமுகின் பாளையை ஒத்து; விரிந்துளது - பரவியுள்ளது; கிள்ளைக் கிளவிக்கு - (இது) கிளிமொழியாகிய சீதைக்கு; என் ஆம் கொல் - எத்தகையது ஆகுமோ?

தற்குறிப்பேற்றவணி. சந்திரனது நிலாக் கற்றை வெள்ளிக் கும்பத்தில் நாட்டிய வெண்பாளைக் கமுகு போன்றது என்றார். வெள்ளிக் கும்பம் - சந்திரனுக்கும், கமுகம் பாளை நிலாக் கற்றைக்கும் ஒப்பு. பூரண கும்பம் வைத்தலும், விரிந்த பாளைகளை அதில் அமைத்தலும் மங்கலமாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the middle of the night that graced a sky blossoming with bright stars as if marked with dots,
  2. the sheaf of moonbeams rising as it licked up the dense mass of darkness —
  3. what will it mean for her whose speech is a parrot's? Placed above the eastern quarter,
  4. it has spread out like the spathe of a young areca palm in a silver pot.

What the poem says

At midnight the moon stands in the east and its beams, which seem to lick up the darkness, fan out like the white spathe of a young areca palm set in a silver ceremonial pot. The moon is the silver pot, and its spreading rays are the opening flower-sheath.

Setting up a full pot with areca spathes is an auspicious rite, but the poet asks what this lovely sight will do to Cītai, the woman who speaks as sweetly as a parrot: for a lover in separation, moonlight only adds to the pain.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1puḷḷik kuṟi iṭṭeṉa oḷ mīṉ pūtta vāṉam poli kaṅkul
naḷḷil ceṟinta iruṭ piḻampai nakki nimirum nilāk kaṟṟai,
kiḷḷaik kiḷavikku eṉṉāmkol! kīḻppāl ticaiyiṉmicai vaitta
veḷḷik kumpattu iḷaṅ kamukiṉ pāḷai pōṉṟu virintuḷatāl.