கம்பராமாயணம் 623 · பால 10.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பண்டு - முற்காலத்திலே; ஆல் இலையின் மிசை - ஆல் இலையின் மேலே; கிடந்து - பள்ளி கொண்டு; பசித்தான் போல் - பசி உடையவன்போல; பாரும் நீரும் - உலகங்களையும் கடல்களையும்; உண்டான் - உண்டவனான திருமாலின்; உந்திக் கடல் - நாபியாகிய கடலானது; அயன் - பிரமன்; வண்டு ஆய் - வண்டையொத்து (மேலே தங்கியிருந்து); நான்மறை பாட - நான்கு வேதங்களும் பாட; மலர்ந்தது - பூத்துள்ள; ஒரு தாமரைப் போது - ஒரு செந்தாமரை மலரை; பூத்தது - உண்டாக்கியது; ஓதக் கடலும் - (அதை நோக்கி இனி) அலைகளையுடைய கடலும்; தான் வேறு ஓர் - தான் வேறொரு; வெண் தாமரையின் மலர் - வெண்டாமரை மலரை; பூத்தது ஒத்தது - பூத்ததை ஒத்திருந்தது; ஆழி வெண்திங்கள் - கடலிலிருந்து தோன்றிய சந்திரன்.
அணி: தற்குறிப்பேற்றவணி. 'பசித்தான் போல்' - கடவுளின் எண்குணங்களுள் பசியின்மையும் ஒன்று. ஆயினும் அதை மறுப்பது போன்று பசித்தான் எனக் கூறினார். ஒப்பு நோக்குக: 'உறுபசி ஒன்று இன்றியே உலகு அடைய உண்டனையே' (சிலம்பு: ஆய்ச்சி. குரவை). உண்ணும் சோறு உலகமாகவும், பருகும் நீர் கடலாகவும், வண்டின் ரீங்காரம் நான்முகனது வேதப் பாடலாகவும் கொள்ள வேண்டும். திருமாலின் உந்திக் கடல் செந்தாமரை பூத்ததுபோல இக் கடல் வெண்தாமரை பூத்தது. கலை நிறைந்த சந்திரன் இதழ் விரிந்த வெண்தாமரை மலரை ஒக்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With Ayaṉ as its bee singing the four Vedas, a single lotus bloomed
- from the sea of the navel of him who once lay on a banyan leaf and, as if hungry,
- ate up the earth and the waters; and the tidal sea too, it seemed,
- had put forth another flower, a white lotus — the white moon over the sea.
What the poem says
The poet sets two oceans and two lotuses side by side. Viṣṇu, who at the end of an age lay as a child on a banyan leaf after swallowing the worlds and the seas, has a navel like a sea, and from it grew the red lotus on which Brahmā sits, humming the Vedas like a bee. Now the real ocean, as if competing, has produced a lotus of its own: the full white moon.
The commentary notes the irony of "as if hungry", since freedom from hunger is one of God's eight attributes, and compares a line in the Cilappatikāram that says the Lord swallowed the world without any hunger.