கம்பராமாயணம் 622 · பால 10.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பெருந்திண் - சிறந்த வலிய; நெடுமால் - மிகவும் உயர்ந்த; வரை நிறுவி - மந்தர மலையை (மத்தாக) நாட்டி; பிணித்த - (அதில்) கட்டிய; பாம்பின் - (வாசுகி என்னும்) பாம்பாகிய; மணித்தாம்பின் - முறுக்கேறிய கடைகயிற்றால்; அமரர் அருந்த - தேவர்கள் உண்ணுவதற்காக; கலக்கிய நாள் - (பாற்கடலைக்) கடைந்த காலத்தில்; விரிந்த திவலை - (வெளியே) தெறித்துப் பரவிய நீர்த்துளிகளும்; உதிர்ந்த மணி - சிதறின இரத்தினங்களும்; விசும்பின் மீனின்மேல் - வானத்து நட்சத்திரங்களைவிட மிகுதியாக; விளங்க - விளங்குமாறு; இடை இருந்தது - அக் கடலின் இடையிலே இருந்ததாகிய; அமுது நிறைந்த - அமுதம் நிறைந்த; பொன் கலசம் - பொன் கலசமானது; வந்து எழுந்தது என - மேல் எழுந்து தோன்றியதுபோல்; வெண் திங்கள் - வெண்மை நிறமுள்ள சந்திரன்; ஆழி - கருங்கடலிருந்து; எழுந்தது - உதித்தது.
கடலிடையே தோன்றிய சந்திரனைப் பாற்கடலின் நடுவே தோன்றிய அமுதப் பொற்கலசமாகக் குறித்தார். அணி: தற்குறிப்பேற்றவணி. சந்திர ஒளியால் வெண்ணிறம் அடைதல் பற்றிக் கருங்கடலுக்குப் பாற்கடலும், அமுத கிரணனான சந்திரனுக்கு அமுத கலசமும் ஏற்ற உவமையாகும். மணித்தாம்பு - மணிக்கயிறு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As on the day when great, strong, tall Māl set up the mountain and, with the jewelled rope of the bound serpent,
- the gods churned the sea so as to drink, while the spreading spray and the gems it held shone above the stars of the sky,
- the golden pot full of nectar that had lain within
- came rising up from the middle — so rose the white moon out of the sea.
What the poem says
The moon rises out of the dark sea, and the poet recalls the churning of the ocean of milk. Viṣṇu set Mount Mantara in the sea as a churning stick, the serpent Vācuki was wound round it as a rope, and the gods churned so that they might drink the nectar of immortality. Spray and scattered gems flew up thicker than the stars, and at last a golden pot full of nectar rose from the depths.
The moonlit sea, turned white, is like the milk ocean, and the moon, whose rays are said to be nectar, is the pot of nectar.