கம்பராமாயணம் 621 · பால 10.69

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆண்டு - அந்த இடத்திலே; அனையாள் - அச் சீதை; இனைய நினைந்து - இவற்றையும் இவை போன்றவற்றையும் எண்ணி; அங்கு - அவ்வாறு; அழுங்கும் ஏல்வை - வருந்தும் போது (தோழியர்); அகல் வானம் - அகன்ற வானத்தையும்; தீண்ட நிமிர்ந்த - தொடும்படி உயர்ந்துள்ள; பெருங்கோயில் - கன்னி மாடத்தில்; சீத மணியின் - குளிர்ந்த சந்திர காந்த மணியால் இழைத்த; வேதிகை வாய் - மேடையில், நீண்ட சோதி - மிக்க ஒளிதரும்; நெய் விளக்கம் - நெய்யினாலே ஏற்றப்படும் விளக்குகள்; வெய்ய என்று - வெப்பம் தருவன என்று கருதி; அங்கு அவை நீக்கி - அவ்விடத்தில் அவற்றை நீக்கி விட்டு; தூண்டல் செய்யா - (யாரும்) தூண்ட வேண்டாத, மணி விளக்கின் - இரத்தின விளக்குகளின்; சுடரால் - ஒளியால்; இரவைப் பகல் செய்தார் - இரவுப்பொழுதைப் பகல் போல வெளிச்சம் உண்டாகும்படி செய்தார்கள்.

சீதை வருந்தும் போது நெய் விளக்கும் அச் சீதையின் வெப்பத்தை மிகுதியாக்கும் என்று தோழியர் கருதி அவற்றை நீக்கிவிட்டு மணி விளக்கால் அங்கு வெளிச்சம் உண்டாக்கினர்.

சீத மணி - சந்திரகாந்தக்கல். 'ஆனாதே இருள் பருகும் அருமணி' - (சீவக. 109)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. There, while she grieved thinking such thoughts, in the great palace that rose
  2. to touch the wide sky, on the dais of cool moonstone,
  3. they said the tall-flamed ghee lamps were too hot, removed them there,
  4. and with the light of gem lamps that need no trimming they made the night into day.

What the poem says

While Cītai laments in the maidens' tower, her companions worry that even the warmth of the ghee lamps will add to her fever. They take the oil lamps away from the moonstone platform and light the room instead with self-luminous jewels, which need no wick and give a cool radiance.

The "cool gem" is the moonstone, believed to be cold to the touch and to glow in moonlight. The commentary compares a line from the Cīvakacintāmaṇi about a precious gem that drinks up darkness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṇṭu aṅku aṉaiyāḷ iṉaiya niṉaintu aḻuṅkum ēlvai, akal vāṉam
tīṇṭa nimirnta peruṅkōyil, cīta maṇiyiṉ vētikaivāy
nīṇṭa cōti ney viḷakkam veyya eṉṟu, aṅku avai nīkkit,
tūṇṭal ceyyā maṇi viḷakkiṉ cuṭarāl iravaip pakal ceytār.