கம்பராமாயணம் 620 · பால 10.68

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(ஓஒ பறவையே) வெளிநின்றவரோ - (என் கண்முன் சிறிது நேரம்) வெளிப்பட்டுத் தோன்றிய தலைவரோ; போய் மறைந்தார் - (இப்பொழுது) மறைந்து சென்றார்; விலக்க - (அவ்வாறு போகும் அவரைப் போக விடாமல்) தடுப்பதற்கு; ஒருவர்தமைக் காணேன் - ஒருவரையும் (நான்) காணவில்லை; எளியள் பெண் என்று - (இப்படிக் கதியற்ற) எளிமையுள்ள பெண் என்று கருதி; இரங்காதே - (சிறிதும்) இரக்கம் கொள்ளாமல்; எல்லியாமத்து - இரவுக் காலத்தின்; இருள் ஊடே - இருளிடையே; ஒளி அம்பு எய்யும் - ஒளிந்து நின்று அம்புகளை (என்மேல்) எய்யும்; மன்மதனார் - காமதேவன்; உனக்கு இம் மாயம் - உனக்கு இந்த வஞ்சகச் செயலை; உரைத்தாரோ - சொல்லிக் கொடுத்தானோ?; அளியென் செய்த - (அல்லாது) எளியவள் முற்பிறப்பில் செய்த; தீவினையோ - பாவமோ; அன்றில் ஆகி - (இந்தப் பிறப்பில்) அன்றில் உருவங்கொண்டு; வந்தாயோ - (என்னை வருத்த) வந்தாயோ?

அன்றில் - இப்பறவை இனத்தில் ஆணும் பெண்ணும் எப்பொழுதும் கூடியிருக்கும். இது இரவில் துணையைப் பிரிந்தால் வருந்தும். அந்த நலிவால் கூவுகின்ற குரலோசை தலைவரைப் பிரிந்து வருந்துகின்ற மகளிர்க்கு அவ் வருத்தத்தை வளர்ப்பதாகக் கூறுதல் கவி மரபு. இம் மாயம்: இருளில் நின்று எனக்குத் தீங்கு இழைக்கும் வித்தை, கொடுமை. யாமம்: ஏழரை நாழிகை - இங்குப் பொழுது என்ற பொருளில் வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'He who stood in the open has gone and vanished; I see no one to hold him back.
  2. Without pity for me, thinking me a helpless woman, in the dark of the night watches,
  3. did lord Maṉmataṉ, who shoots his arrows from hiding, teach you this trick?
  4. Or are you the evil deeds of wretched me, come in the form of an aṉṟil bird?'

What the poem says

Cītai turns to the aṉṟil, a bird whose mates are never apart and which cries piteously at night if separated. Its call is a stock image in Tamil poetry for intensifying the grief of a woman parted from her lover.

She complains that the man who appeared before her for a moment has disappeared, and no one stopped him. She asks whether the love god, who shoots at her from the darkness, taught the bird this cruelty, or whether the bird is simply her own past sins taking shape to torment her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veḷi niṉṟavarō pōy maṟaintār, vilakka oruvartamaik kāṇēṉ,
eḷiyaḷ peṇ eṉṟu iraṅkātē, elli yāmattu iruḷūṭē
oḷi ampu eyyum maṉmataṉār uṉakku im māyam uraittārō,
aḷiyeṉ ceyta tīviṉaiyō aṉṟil āki vantāyō.