கம்பராமாயணம் 6274 · யுத்த 3.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
முக்கண் தேவனும் - மூன்று கண்களை உடைய சிவ பெருமானும்; நான் முகத்து ஒருவனும் முதலா - நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முதலாக; மக்கள் காறும் - மண்ணுலகில் வாழும் மக்கள் இறுதியாக; இம்மந்திரம் மறந்தவர் - இவ்வெட்டு எழுத்து மந்திரத்தை மறந்தவர்கள்; மறந்தார் - தாம் அடைய இருந்த உறுதிப் பேறுகளை மறந்தவராவார்; புக்குக் காட்டுவது அரிது இது - இதன் பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து அறிவிப்பதென்பது இயலாத தொன்று; பொதுவுறக் கண்டார் - வேறுபாடின்றி எக்காலத்துக்கும் பொது நெறி நின்று யோகத்தால் அறிந்த மேலோரும்; ஒக்க நோக்கினர் - அவர் வழிநின்று பொருந்தி மெய்யுணர்ந்த ஞானிகளும்; அல்லவர் இதன் நிலை உணரார் - அல்லாத மற்றவர் இம்மந்திரத்தின் சீர்மையை அறிந்துணர மாட்டார்
அறிவு கொண்டு ஆராயும் வெற்றறிவின் வலையிலே மந்திரப் பெருமை சிக்காது. ஞானியர் யோகியர் அனுபவித்தறிவது அதன் சீர்மை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the three-eyed god and the four-faced one down to human beings,
- those who forget this mantra have forgotten their own good;
- it is hard to enter into it and show it; those who have seen it as common to all
- and those who look on it alike know its state; others do not know it.
What the poem says
Whoever forgets this mantra, even Śiva or Brahmā, loses the highest good. Its meaning cannot be unpacked by intellectual analysis; only yogis and sages who experience it directly understand its greatness.