கம்பராமாயணம் 6273 · யுத்த 3.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணின் நின்று - இந்த மண்ணுலகு தொடங்கி; மேல் மலர் அயன் உலகு உற - மேலேயுள்ள பிரமதேவனுக்குரிய சத்தியலோகம் வரை எங்கும்; வாழும் எண்இல் பூதங்கள் - வாழுகின்ற எண்ணற்ற உயிரினங்களில்; நிற்பன திரிவன - நிலையியற் பொருள் இயங்கியற் பொருள்; இவற்றின் - ஆகிய இவ்விரு வகைப் பொருள்களின்; உள்நிறைந்துள - உள்ளத்தே நிறைந்திருக்கின்ற; கரணத்தின் ஊங்கு உள உணர்வும் - உயிர் உணர்வும் அதைக்கடந்து நிற்கும் மெய்யுணர்வும் (ஞானம்); எண்ணுகின்றது - நினைந்து போற்றுவது; இவ்வெட்டெழுத்தே - இந்த எட்டெழுத்து மந்திரத்தினையேயாம்; பிறிது இல்லை - இதுவல்லாத வேறு எதுவும் இல்லை.
மேல் மலர் அயன் உலகு - பிரம்ம தேவன் வாழும் சத்திய லோகம். பூதங்கள் - (பூதங்களின் கூட்டால் உருவாகும்) உயிர் வர்க்கம். கரணம் - உள்ளம், உரை, செயல் முதலியன
ஆங்கிலம் · English translationAI
Translation
- The countless beings who live from the earth up to the world of Ayaṉ on the flower,
- those that stand still and those that move, the awareness that fills them within
- and the understanding that lies beyond their faculties:
- what they all contemplate is these eight syllables; there is nothing else.
What the poem says
The eight-syllable mantra, "Om namō nārāyaṇāya", is the inner meditation of all creatures, moving and unmoving, from the earth to Brahmā's heaven. Both ordinary consciousness and the higher wisdom beyond the senses are directed towards it.