கம்பராமாயணம் 6272 · யுத்த 3.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காமம் யாவையும் தருவதும் - நாம் விரும்பும் நற்பேறுகள் எல்லாவற்றையும் தரவல்லதும்; அப்பதம் கடந்தால் - (விரும்பும் நிலையான) அப்பதவிகளைக் கடந்தபின்பு; சேமவீடு உறச் செய்வதும் - என்றும் அழியாத நிலைத்த தன்மையுடைய பாதுகாப்புதவும் வீட்டின்பத்தைத் தருவதும்; செந்தழல் முகந்த - செம்மையான தீயால் முகந்து கொள்ளப்படும்; ஓம வேள்வியின் உறுபதம் - யாகத்தினால் அடையும் துறக்கம் முதலிய பதவிகளிலே; உய்ப்பதும் - நம்மைச் செலுத்துவதும்; ஒருவன் நாமம் - ஒப்பற்ற ஒருவனாகிய பரமனது திருநாமமே, அன்னது கேள் நமோ நாராயணாய - அதனைக் கேட்பாயாக ஓம்நமோ நாராயணாய நம என்பது அது.
காமம்- விரும்பும் நற்பேறுகள். சேமம்- பாதுகாப்பு. சேமவீடு - பரமபதம். "நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே” எனவெல்லாம் அருளிச் செயல் கூறுவதை நினைவு கூர்வோமாக. இம்மை, மறுமை இன்பங்களைத் தரவல்லது இத்திரு மந்திரமே என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What grants every desire and, once those states are passed,
- brings one to the safe abode of release, and what leads one to the high states
- won by fire sacrifices with the red flame, is the name
- of the One; hear it: Namō Nārāyaṇāya.
What the poem says
Pirakalātaṉ boldly speaks the forbidden mantra in his father's face. He declares that this one name gives every worldly wish, the heavenly rewards of sacrifice, and finally liberation itself, so it covers the blessings of both this life and the next.