கம்பராமாயணம் 6271 · யுத்த 3.41

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவர் செய்கையன் - (அசுரனான இரணியனுக்கு மகனாகப் பிறந்தும்) தேவர்களைப் போன்ற சிறந்த ஒழுக்கத்தை உடையவனாகிய பிரகலாதன்; அங்ஙனம் உரை செய - அவ்வாறு கூற; தீயோன்- கொடிய இயல்புடைய இரணியன்; தா இல் வேதியன் - குற்றமில்லாத அந்தணனாகிய ஆசிரியன்; தக்கதே உரை செயத்தக்கான் - தகுதியானவைகளையே கூறத் தகுந்தவனாவான்; ஆவது ஆகுக - நடக்கவேண்டியது நடக்கட்டும்; அன்று எனின் அறிகுவம் - இவன் கூறும் சொல்நமக்கு நன்மை தராதது என்றாலும் அதை அறிவோம்; என்றே - என்றெண்ணியவனாக; யாவது அவ்வுரை இயம்புதி இயம்புதி என்றான் - நீ சொல்லும் அந்தப் பெயர் எது கூறுக கூறுக என்றான்.

'இயம்புதி இயம்புதி' விரைவு பற்றி வந்த அடுக்கு. தேவர் செய்கையன் - அரக்கர் குலத்தினன் ஆயினும் தேவர்களைப் போன்ற நடத்தை உடையவன் என்பது கருத்து; 'நீதியால் வந்ததொரு நெடுந்தரும் நெறியல்லால் சாதியால் வந்த சிறு நெறியறியான்' என வீடணனைப் பற்றி உரைப்பது நினைவு கூரத்தக்கது. (7625)

ஆசிரியன் சரியாகத்தான் சொல்லியிருக்கிறான் என்று இரணியன் கருதியதை 'தக்கதே உரைசெயத்தக்கான்' என்ற தொடர் உணர்த்துகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he whose conduct was that of the gods spoke thus, the evil one thought,
  2. The faultless Brahmin is one fit to say only what is fit;
  3. let what will be, be; if not, we shall find out, and said,
  4. What is that word? Say it, say it!

What the poem says

Pirakalātaṉ, though born a demon, behaves like a god, as Vīṭaṇaṉ himself is later said to follow righteousness rather than birth. Iraṇiyaṉ suspects the teacher had good reason to be alarmed, but decides to hear the word himself whatever the consequence, and impatiently demands it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tēvar ceykaiyaṉ aṅṅaṉam uraiceyat tīyōṉ
"tā il vētiyaṉ takkatē uraiceyat takkāṉ;
āvatu ākuka; aṉṟu eṉiṉ aṟikuvam" eṉṟē
"yāvatu av urai? iyamputi iyamputi" eṉṟāṉ.