கம்பராமாயணம் 6276 · யுத்த 3.46

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அறிஞரில் தூயோன் - அறிஞர்களில் தூய பேரறிவினனாகிய பிரகலாதன்; உன் உயிர்க்கும் - உன்னுடைய உயிருக்கும்; என் உயிர்க்கும் - என்னுடைய உயிருக்கும்; இவ்வுலகத்திலுள்ள மன்னுயிர்க்கும் - இவ்வுலகத்தில் வாழுகின்ற வேறு பல உயிர்களுக்கும்; ஈது உறுதி என்று - இதுதான் உறுதிபயப்பதென்று; உணர்வு உற மதித்துச் சொன்னது - எனதுள்ளத்தே முகிழ்த்த நல்லுணர்வால் ஆராய்ந்து கூறியது; இப்பெயர் - இந்தப் பரமனின் திருப்பெயராகும்; என்றனன் - என்று கூறினான்; (அதைக்கேட்ட) மின் உயிர்க்கும் வேல் இரணியன் - மின்னலைப் போல ஒளிரும் வேலை உடைய இரணியன்; தழல் எழ விழித்தான் - (சினத்தால்) கண்களில் நெருப்பெழ விழித்தான்.

'அறிஞரில் தூயோன்' என்றது பிரகலாதனை. அறிஞரின் அறிஞன் என்றும் தூயர் என்பவர் யாரினும் தூயான் என்றும் முன்னமே (6207) கூறியுள்ளார்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. For your life, for my life, and for every living being in this world,
  2. knowing this to be the true good, I considered and spoke
  3. this name, said the purest of the wise;
  4. Iraṇiyaṉ, whose spear flashes like lightning, glared with eyes that blazed with fire.

What the poem says

Pirakalātaṉ explains that he spoke the name out of concern for his father, himself and all creatures. Iraṇiyaṉ's reaction is instant fury, his eyes flaming.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'uṉ uyirkkum eṉ uyirkkum iv ulakattiṉuḷḷa
maṉṉuyirkkum ītu uṟuti eṉṟu uṇarvuṟa matittuc
coṉṉatu ip peyar'' eṉṟaṉaṉ, aṟiñariṉ tūyōṉ;
miṉ uyirkkum vēl iraṇiyaṉ taḻal eḻa viḻittāṉ.