கம்பராமாயணம் 6277 · யுத்த 3.47

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'அற்றை நாள்முதல், யான் உள நாள்வரை, அப்பேர்
சொற்ற வாயையும் கருதிய மனத்தையும் சுடும், என்
ஒற்றை ஆணை; மற்று, யார் உனக்கு இப்பெயர் உரைத்தார்?
கற்றது ஆரொடு? சொல்லுதி விரைந்து''எனக் கனன்றான்.

பொருள் · Meaning in Tamil

இற்றை நாள் வரை - இந்த நாள் வரையும்; யான் உள நாள்முதல் - நான் ஆட்சிக்கு வந்த நாள்முதலாக; இப்பேர் சொற்ற நாவையும் - இந்தப் பெயரைச் சொன்ன நாவையும்; கருதிய மனத்தையும் - நினைத்த மனத்தையும்; சுடும் என் ஒற்றை ஆணை - சுட்டு அழிக்கும் நிகரற்ற எனது தனியாணை; மற்றுயார் உனக்கு இப்பெயர் உரைத்தார் - இருந்தும், உனக்கு இந்தப் பெயரை யார் சொன்னார்கள்?; கற்றது ஆரோடு - எவரிடம் கற்றறிந்தாய்?; சொல்லுதி விரைந்து - சீக்கிரம் பதில் சொல்; எனக் கனன்றான் - என்று சினந்து கூறினான்.

யான் உள நாள் - தவபலத்தால் நான் ஆட்சி செய்யத் தொடங்கிய நாளிலிருந்து - "இப்பேர்" பிரகலாதன் கூறிய திரு நாமத்தை இன்னதெனச் சொல்லாமல் வெறுப்புத் தோன்ற 'இப்பேர்' என்றான். ஒற்றை ஆணை - ஒப்பற்ற ஆணை (ஏக சக்ராதிபத்யம்) 'மற்று' வினைமாற்றுப் பொருள். கனன்றான் - சினந்து கூறினான். தன் மகன் ஆதலின் குற்றத்தை அவன்மேல் ஏற்றாது பிறர்மேல் ஏற்றி, 'யார் உரைத்தார்' 'கற்றது ஆரொடு' என்று இரணியன் கூறியதாகக் கவிச்சக்கரவர்த்தி உரைத்த நயம் உணர்க. இவ்வாறு பின்னும் வரும் இது மகாவித்துவான். வே. சிவசுப்பிரமணியன் அவர்கள் கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. From the day I came to be until today, my sole command
  2. burns the tongue that speaks this name and the mind that thinks it; then who
  3. told you this name? From whom did you learn it?
  4. Tell me quickly! he raged.

What the poem says

Iraṇiyaṉ reminds his son that his absolute law punishes anyone who even thinks of Viṣṇu's name. He avoids naming it himself, calling it only "this name". Out of fatherly feeling he blames some unknown teacher rather than the boy, demanding to know who taught him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'iṟṟai nāḷ varai, yāṉ uḷa nāḷ mutal, ip pēr
coṟṟa nāvaiyum karutiya maṉattaiyum cuṭum, eṉ
oṟṟai āṇai; maṟṟu, yār uṉakku ip peyar uraittār?
kaṟṟatu āroṭu? colluti viraintu'' eṉak kaṉaṉṟāṉ.