கம்பராமாயணம் 6278 · யுத்த 3.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
முனைவர் வானவர் முதலினர் - தேவர்களுக்குத் தலைவர்களான மூவரும் மற்றுமுள்ள தேவர் முதலானோரும்; மூன்று உலகத்தும் எனைவர் உள்ளவர் யாவரும் - இந்த மூன்று உலகங்களிலும் வாழுகின்றவர்களான மற்ற எல்லோரும்; நினைவது என் இரு கழலே- எப்போதும் நினைந்து போற்றுவது எனது இரண்டு பாதங்களையேயாம்; ஓதுவது என்பெயர் - இனமும் ஓதுவதும் எனது பெயரையேயாம்; நினக்கு இது நேர - உனக்கு இந்தப் பெயரை நேர்ந்து சொல்ல; அனையர் அஞ்சுவர் - அந்த மூவரும், தேவரும், பிறரும் அஞ்சுவார்கள்; மைந்த! நீ யாரிடை அறிந்தாய் - மைந்தனே! நீ இந்தப் பெயரை யாரிடம் அறிந்து கொண்டாய்?
நேர - உடன்பட்டுக் கூற. முனைவர் - முதல்வர் (அயன், அரி, சிவன் ஆகிய மூவர்). எனைவர் - எத்தனை பேர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The first lords, the gods and the rest, all the beings
- there are in the three worlds, think only of my two feet
- and recite my name; to agree to say this to you
- they would be afraid; my son, from whom did you learn it?
What the poem says
Everyone in the three worlds, even the chief gods, meditates on Iraṇiyaṉ's feet and chants his name. None of them would dare teach Viṣṇu's name to the prince, so Iraṇiyaṉ cannot understand where his son heard it.