கம்பராமாயணம் 6279 · யுத்த 3.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மறம்கொள் வெஞ் செரு மலைகுவான் - வீரம் மிக்க கொடிய போரை என்னுடன் செய்வதற்காக; பல்முறைவந்தான் - (நீ கூறிய அத்திருமால்) பலமுறை வந்தான்; கறங்கு வெஞ்சிறை - (எனக்குத் தோற்று) சுழன்று பறக்கின்ற வெம்மையான இறகுகளை உடைய; கலுழன் தன் கடுமையின் கரந்தான் - வாகனமாகிய கருடனது விரைந்து செல்லும் வேகத்தால் மறைந்தான்; பிறங்கு தெண் திரை - பெருகிவரும் தெளிந்த அலைகளைஉடைய; பெருங்கடல் புக்கு - பெரிய பாற்கடலிலே புகுந்து; இனம் பெயராது - இன்னும் அந்த இடத்தை விட்டு இடம் பெயராது; உறங்குவான் பெயர் - உறங்குபவனாகிய திருமாலின் பெயர்; உறுதி என்று - உறுதிப் பேறுதரவல்லது என்று; ஆர் உனக்கு உரைத்தார் - யார் உனக்குச் சொன்னார்கள்?
வெஞ்செரு - கொடியபோர். மலைகுவான் - போரிடுதற்காக (வானீற்று வினை எச்சம்). கறங்கு - காற்றாடி போலச் சுழன்று பறத்தல். கலுழன் - கருடன். இனம்- இன்னம் என்பதன் இடைக்குறை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He came many times to fight me in fierce, cruel war,
- and vanished thanks to the speed of Garuḍa with his whirling, burning wings;
- he entered the great sea of bright clear waves and still lies there unmoving,
- asleep: who told you that his name is your salvation?
What the poem says
Iraṇiyaṉ ridicules Viṣṇu as a coward. In his telling, Viṣṇu came to fight him many times, fled on swift Garuḍa, and now hides asleep in the ocean of milk, where he is traditionally shown reclining on his serpent. How could such a god's name save anyone?