கம்பராமாயணம் 6280 · யுத்த 3.50

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'பரவை நுண் மணல் எண்ணினும் எண்ண அரும் பரப்பின்
குரவர் நம்குலத்து உள்ளவர் அவன் கொ(ல்)லக் குறைந்தார்;
அரவின் நாமத்தை எலி இருந்து ஓதினால், அதற்கு
விரவும் நன்மை என்? துன்மதி! விளம்பு''என வெகுண்டான்.

பொருள் · Meaning in Tamil

துன்மதி - கெடுமதி கொண்டவனே! பரவை நுண்மணல் எண்ணினும் - கடற்கரையில் உள்ள நுண்ணிய மணலை எண்ணினாலும்; எண்ணஅரும் பரப்பின் - எண்ணுதற்கரிய பரப்பினராக; குரவர் நம் குலத்துள்ளவர் - நம் குலத்து முன்னோர்களாக வாழ்ந்த பலரும்; அவன் கொலக் குறைந்தார் - அத்திருமால் கொல்ல அழிந்து அளவில் குறைந்தனர்; அரவின் நாமத்தை - தனக்குப் பகையான பாம்பின் பெயரை; எலி இருந்து ஓதினால் - எலி அமைதியாய் இருந்து ஓதுவதால்; அதற்கு விரவும் நன்மை என் - அந்த எலிக்கு வந்து சேரும் நன்மை என்ன?; 'விளம்பு' என வெகுண்டான் - சொல்லு எனக்கோபித்துக் கூறினான்.

பரவை - கடல். குரவர்- முன்னோர். 'அரவின் நாமத்தை எலி' என்ற உவமையின்மூலம் இரணியன் நாராயணனை அரவு என்றும், தம்மை எலி என்றும் உவமைப்படுத்தி திருமாலின் வலிமையை உறுதிப்படுத்தியது போல் கூறினானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Our elders of our race, more numerous
  2. than the fine sands of the sea, dwindled when he killed them;
  3. if a rat sits and chants the name of the snake, what good
  4. can come to it? Tell me, you fool! he said in fury.

What the poem says

Viṣṇu has killed countless demons, Iraṇiyaṉ's ancestors. For a demon to praise him is like a rat praising a snake. The commentary notes the irony: by choosing this image, Iraṇiyaṉ unwittingly admits that Viṣṇu is the stronger one.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'paravai nuṇ maṇal eṇṇiṉum eṇṇa arum parappiṉ
kuravar nam kulattu uḷḷavar avaṉ kolak kuṟaintār;
araviṉ nāmattai eli iruntu ōtiṉāl, ataṟku
viravu naṉmai eṉ? tuṉmati! viḷampu'' eṉa vekuṇṭāṉ.