கம்பராமாயணம் 6388 · யுத்த 3.158
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பல்லாயிர கோடி அண்டம் - பல ஆயிரம் கோடி என்று கூறும் அண்டங்கள் அனைத்தும்; பனிக் கடலுள் நில்லாத மொக்குள் என - குளிர்ந்த கடலிலே தோன்றிய நிலையற்ற நீர்க்குமிழிகளைப் போல; நின்னுழையே தோன்றுமால் - உன்னிடத்திலிருந்தே தோன்றும்; எல்லா உருவமுமாய் நின்றக்கால் - இவ்வண்டத்திலுள்ள எல்லா வடிவாகவும் நீயே இருப்பாயானால்; இவ்வுருவம் வல்லே படைத்தால் - இந்த நரசிங்க வடிவத்தை (புதிய தொன்றாக) விரைந்து படைத்தாயென்றால்; வரம்பின்மை வாராதோ? - உனது படைப்புத் தொழிலில் வரம்பின்மை என்ற குற்றம் வராதோ.
பல்லாயிர கோடி அண்டம் - பல ஆயிரம் கோடி அண்டங்கள். "நூற்றொரு கோடியின் மேற்படவிரிவன" என்பது திருவாசகம். நில்லாமொக்குள் - நிலைத்திராத நீர்க்குமிழி. நீலநிறக் கடலில் தோன்றும் நீர்க் குமிழிகள் போல, பல்லாயிரம் கோடி அண்டங்கள் நீல வண்ணனான உன்னிடமிருந்து தோன்றும் என்பார் "நின்னுழையே தோன்றுமால்" என்றார். நீயே உலகத்தில் காணும் எல்லாப் பொருளுமாக இருக்கிறாய். அப்படி இருக்கும் போது புதிய தொரு வடிவினை (நரசிங்க வடிவம்) படைத்துக் கொள்வாயானால் உனது படைப்புத் தொழிலில் வரம்பின்மை என்னும் குற்றம் வாராதோ என்றான். நியதி மாறாமல் இயங்குவன இறைவன் படைப்புகள். ஊழ், விதி, முறை என்பன தெய்வத்தைக் குறிக்கும் ஒரு பொருட் சொற்கள். இதுகாறும் படைப்பிலே இல்லா ஓர் உருவத்தை (நரசிம்மத்தை) படைத்தது நியதியிலிருந்து மாறுகிறது. எனவே, இது வரம்பின்மை ஆகாதோ? என்பது கருத்து. அடியவர்களைக் காக்க, வேண்டும் போது விரும்பிய வடிவம் கொள்ளவல்ல இறைவனுக்கு 'வரம்பின்மை' என்னும் குற்றம் வாராது என்க. "உயிரளிப்பான், எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்" என்ற திருவிருத்தம் (நாலாயிரப் 3580) ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Thousands upon thousands of crores of worlds appear in You
- like fleeting bubbles on the cold sea;
- since You already stand as every form, if You swiftly
- created this form as well, would that not be going beyond all bounds?"
What the poem says
The countless universes rise in God like bubbles on the sea. Brahmā asks playfully: since God already is every form, is it not breaking the rules of creation to make a brand-new form like the Man-Lion? The commentary answers that God, who takes any form he wishes to protect his devotees, cannot be accused of breaking bounds.