கம்பராமாயணம் 6390 · யுத்த 3.160
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நின்னுளே - உனக்குள் இருந்து; என்னை நிருமித்தாய் - நீ என்னைத் தோன்றச் செய்தாய்; நின் அருளால் - உனது திருவருள் துணையால்; என்னுளே எப்பொருளும் - எனக்குள் இருந்து (அசித்) உயிரற்ற பொருள்களையும்; யாவரையும் யான்ஈன்றேன் - உயிருள்ள (சித்) பொருள்களையும் யான் படைத்தேன்; பின் இலேன் முன் இலேன் - எனக்கென்று தனியான காரண காரியம் எதுவுமில்லை; எந்தை பெருமானே - எமக்கெல்லாம் தந்தையான எம்பெருமானே; பொன்னுளே தோன்றியதோர் பொற்கலனே போல்கின்றேன் - உன்னிலிருந்து தோன்றி நான்; பொன்னிலிருந்து தோன்றிய பொற்கலன் போன்றவனாவேன்.
இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையே அமைந்த தொடர்பு பொன்னுக்கும், அதனால் செய்யப்பட்டு அப்பொன்னினும் வேறாகாத அணிகலனுக்கும் இடையுள்ள சம்பந்தம் போன்றது. இதனை "அபேத சம்பந்தம்" எனச் சமய நூல்கள் கூறும். இப்பாடலின் கடைசி இரண்டடிகள் இந்த உண்மையைக் கூறுவதாம். பின் - காரியம். முன் - காரணம்.
உன்னையல்லாது எனக்கு ஆதியும் வேறில்லை. நான் சென்றடையும் அந்தமும் வேறில்லை என்பார் 'முன் இலேன் பின்இலேன்' என்றார் என்று கூறினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Within Yourself You formed me; by Your grace
- within myself I brought forth all things and all beings;
- I have no after and no before; my Father, my Lord!
- I am like a golden ornament that appears within the gold."
What the poem says
Brahmā describes his relation to God. God brought Brahmā forth from within himself, and by God's grace Brahmā brought forth all things, living and non-living. Brahmā has no beginning or end apart from God. Like an ornament that is never other than the gold it is made of, he is never separate from God.