கம்பராமாயணம் 6391 · யுத்த 3.161

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'என்று ஆங்கு இயம்பி இமையாத எண் கணனும்
வன்தாள் மழுவோனும் யாரும் வணங்கினார்;
நின்றார் இருமருங்கும்; நேமிப் பெருமானும்
ஒன்றாத சீற்றத்தை உள்ளே ஒடுக்கினான்.

பொருள் · Meaning in Tamil

என்று ஆங்கு இயம்பி - என்றெல்லாம் பலவாறு கூறித் துதித்து; இமையாத எண்கணனும் - இமைக்காத எட்டுக்கண்களை உடையவனான பிரமதேவனும்; வன்தாள் மழுவோனும் - வலிய போர்த் தொழில் வல்ல மழுவை ஆயுதமாக உடைய சிவபிரானும்; யாரும் வணங்கினர் - மற்றுமுள்ள தேவர்கள் எல்லோரும் நரசிங்க மூர்த்தியை வணங்கினார்கள்; இரு மருங்கும் நின்றார்- அப்பெருமானுக்கு இருபுறங்களிலும் வந்து குழுமி நின்றார்கள்; நேமிப் பெருமானும் - சக்கராயுதத்தை உடைய எம்பெருமானும், ஒன்றாத சீற்றத்தை - தன் இயல்புக்கு ஒவ்வாத பெருஞ்சினத்தை; உள்ளே ஒடுக்கினான் - தனக்குள்ளே ஒடுங்குமாறு செய்தருளினான்.

தேவர்கள் இமையாநாட்டம் உடையவராதலின் 'இமையாத எண்கணன்' என்றார். எண்கண்ணன் - பிரமன். கருணையே இறைவனது இயல்பு. அப்பெருமானது இயல்புக்குச் சிறிதும் ஒவ்வாதது சினமாதலின் 'ஒன்றாத சீற்றம்' என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken thus, the unblinking eight-eyed one,
  2. the bearer of the strong axe, and all the others bowed;
  3. they stood on either side; and the Lord of the discus
  4. drew back within himself the wrath so foreign to his nature.

What the poem says

After Brahmā's hymn, he, Civaṉ with his battle-axe and all the gods bow and stand on both sides of the Man-Lion. Tirumāl, whose true nature is compassion, then calms the anger that does not belong to him.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṟu āṅku iyampi imaiyāta eṇkaṇaṉum
vaṉ tāḷ maḻuvōṉum yārum vaṇaṅkiṉarāl;
niṉṟār iru maruṅkum; nēmip perumāṉum
oṉṟāta cīṟṟattai uḷḷē oṭukkiṉāṉ.