கம்பராமாயணம் 6392 · யுத்த 3.162

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"எஞ்சும், உலகு அனைத்தும் இப்பொழுதே" என்று என்று,
நெஞ்சு நடுங்கும் நெடுந் தேவரை நோக்கி,
"அஞ்சன்மின்" என்னா, அருள் சுரந்த நோக்கினான்,
கஞ்ச மலர் பழிக்கும் கை அபயம் காட்டினான்.

பொருள் · Meaning in Tamil

உலகு அனைத்தும் இப்பொழுதே எஞ்சும் - (நரசிங்கப்பிரானுடைய சீற்றத்தால் எல்லா உலகங்களும் இப்பொழுதே அழிந்து சிதையும்; என்றென்று நெஞ்சு நடுங்கும் நெடுந்தேவரை நோக்கி - என்றெண்ணி அச்சத்தால் மனம் நடுங்க நின்ற தேவர்களைப் பார்த்து; அஞ்சன்மின் என்னா - (நரசிங்கப்பிரான்) அஞ்சாதீர்கள் என்றுகூறி; அருள் சுரந்த நோக்கினால் - கருணை நிறைந்து பொங்கும் அருள் நோக்குடனே; கஞ்ச மலர் பழிக்கும்கை - தாமரை மலரையும் பழிக்கும்படியான அழகிய கையால்; அபயம் காட்டினான் - அபயக் குறிப்பைக் காட்டியருளினான்.

எஞ்சுதல் - குறைதல் (சிதைதல்). "அருள் சுரந்த நோக்கினால் அஞ்சன்மின் என்னா - கை அபயம் காட்டினான்" என இயையும். கஞ்சம் - தாமரை. தாமரைமலரை வென்று நிற்கும் அழகிய கையை "கஞ்சமலர் பழிக்கும் கை" என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking on the great gods whose hearts trembled as they said again and again,
  2. "All the worlds will perish this very moment,"
  3. he said, "Do not fear," and with a gaze overflowing with grace
  4. showed the sign of refuge with a hand that puts the lotus to shame.

What the poem says

The gods still fear that the Man-Lion's anger will destroy the worlds. With a look full of grace he tells them not to be afraid, and raises his lotus-like hand in the gesture that grants protection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"eñcum, ulaku aṉaittum ippoḻutē" eṉṟu eṉṟu,
neñcu naṭuṅkum neṭun tēvarai nōkka,
"añcaṉmiṉ" eṉṉā, aruḷ curanta nōkkiṉāl,
kañca malar paḻikkum kai apayam kāṭṭiṉāṉ.