கம்பராமாயணம் 6393 · யுத்த 3.163

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'பூவில் திருவை, அழகின் புனைகலத்தை,
யாவர்க்கும் செல்வத்தை, வீடு ஈனும் இன்பத்தை,
ஆவித் துணையை, அமுதின் பிறந்தாளை,
தேவர்க்கும் தம் மோயை, ஏவினார், பாற் செல்ல.

பொருள் · Meaning in Tamil

பூவில் திருவை - செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளை; அழகின் புனைகலத்தை - அழகு (தனக்கு மேலும் அழகு வேண்டி) அணியும் அணிகலன் போன்றவளை; யாவர்க்கும் செல்வத்தை - எல்லோருக்கும் செல்வத்தை வழங்கும் செல்வியாகத் திகழ்பவளை; வீடு என்னும் இன்பத்தை - பரமபதம் என்ற பேரின்ப வீட்டைத் தந்தருள்பவளை; ஆவித்துணையை - திருமாலின் உயிர்த்துணையாகப் பிரியாது இருப்பவளை; அமுதில் பிறந்தாளை - அமுதம் பிறந்த பாற்கடலில் பிறந்தவளை; தேவர்க்கும் தம் மோயை - தேவர்களுக் கெல்லாம் தாயாக விளங்குபவளை; பாற் செல்ல ஏவினார் - (சீற்றம் கொண்டு நின்ற சிங்கப்பிரான்) பக்கத்திலே சென்றருளப் பிரார்த்தித்து (பிரமன் முதலான தேவர்) அனுப்பினர்.

பூ- தாமரைப்பூ; பூ வெனப்படுவது பொறி வாழ் பூவே என்றபடி. திரு - திருமகள். அணிகலம் போன்றவள் பிராட்டி என்பார் 'அழகின் புனைகலத்தை' என்றார். செல்வத்துக்கு உரிமை பூண்டுள்ள அதிதேவதை திருமகளே யாதலின் "யாவர்க்கும் செல்வத்தை" என்றார். உயிர்களுக்குப் பேரின்ப வீட்டை அருள்பவளும் பெரிய பிராட்டியே ஆதலின் 'வீடு என்னும் இன்பத்தை' என்றார். 'அகலகில்லேன்' எனப்பரமனை விட்டு நீங்காது உடன் உறைபவள் என்பதால் "ஆவித்துணையை" என்றார். 'தேவர்க்கும்' என்ற உம்மை மற்றுமுள்ள எல்லோர்க்கும் என்ற பொருள் தந்து நின்ற எச்சவும்மை. மோய் - தாய்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The Śrī of the lotus, the ornament that beauty itself puts on,
  2. the wealth of all beings, the bliss called release,
  3. the companion of His very life, she who was born from the nectar,
  4. mother even to the gods — they sent her to go to His side.

What the poem says

To soothe the Man-Lion completely, the gods send his consort Tirumakaḷ, the goddess Lakṣmī, to his side. The verse gives her titles: she sits on the lotus, adorns beauty itself and grants wealth and final release. She never leaves the Lord, was born from the ocean of milk along with the nectar, and is mother to the gods and to all beings.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'pūvil tiruvai, aḻakiṉ puṉai kalattai,
yāvarkkum celvattai, vīṭu eṉṉum iṉpattai,
āvit tuṇaiyai, amutiṉ piṟantāḷai,
tēvarkkum tam mōyai, ēviṉār, pāṟ cella.