கம்பராமாயணம் 6394 · யுத்த 3.164
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தன் ஒப்பு ஒன்று இல்லாதான் - தனக்கு உவமையில்லாத தனித் தலைவனாகிய எம்பெருமான்; செந்தாமரைப் பொகுட்டில் - செம்மை நிறமுடைய தாமரை மலரின் நடுவே; செம்மாந்து வீற்றிருக்கும் - மனமகிழ்வோடு அமர்ந்தருளும்; நந்தா விளக்கை - தூண்டாத விளக்குப் போன்றவளை; நறுந்தாள் இளங்கொழுந்தை - நறுமணம்கமழும் காம்போடு கூடிய இளங்கொழுந்து போன்றவளை; முந்தா உலகும் உயிரும் - இவ்வுலகையும் உயிர்களையும், முறை முறையே தந்தாளை - வழி வழியாகத் தந்தருள்பவளை; நோக்கினான் - (கருணை நிறைந்த கண்களால்) பார்த்தருளினான்.
ஒப்பு - நிகர். தனக்கு வேறு எவரும் நிகரில்லாத தனிப் பெரும் தலைவனாகத் திகழ்பவன் திருமால் என்பதால் 'தன் ஒப்பு ஒன்றில்லாதான்' என்றார். பொகுட்டு - தாமரை மலரின் மையத்திலிருக்கும் கொட்டை. செம்மாந்து - மனம் மகிழ்ந்து (செம்மாப்பு - கம்பீரம் எனினுமாம்). நறும்தாள்- நறுமணம் கமழும் கொம்பு. இளங்கொழுந்து - இளந்தளிர். முந்தா- முந்திய (முற்பட). முறை முறையே- வழிவழியாகத் தொடர்ந்து. திருமாலை விட்டுப் பிரியாது அப்பரமனது படைப்புக்கும் உறுதுணையாய் விளங்குபவள் என்பதால் 'உலகும் உயிரும் தந்தாள்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the undying lamp who sits in glory at the heart of the red lotus,
- the tender shoot on a fragrant stem,
- she who in due order brought forth the ancient worlds and living beings,
- He gazed — He who has no equal anywhere.
What the poem says
Tirumakaḷ comes to the Man-Lion's side, and the peerless Lord looks at her. She is described as a lamp that never needs trimming, seated proudly on the red lotus, and as a fresh, fragrant shoot. As God's constant companion she shares in his creation of the worlds and their creatures.