கம்பராமாயணம் 6395 · யுத்த 3.165

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தீது இலாஆக- எவ்வுயிர்க்கும் எந்தத் தீமையும் இல்லாதிருக்க; உலகு ஈன்ற தெய்வத்தை - இவ்வுலகனைத்தையும் ஈன்றுதவிய தெய்வத்தை; காதலால் நோக்கினான் - (சிங்கப்பிரான்) காதலோடு பார்த்தருளினான்; கண்ட முனிக் கணங்கள் - இதைப் பார்த்த முனிவர் கூட்டமெல்லாம்; சீர்த்தி ஓதினார் - எம்பெருமானுடைய மிகு புகழைக் கூறி வாழ்த்தினர்; உயர்ந்த பரஞ்சுடரும் - உயர்வற உயர்ந்த மேலான ஒளிமயமாக விளங்கும் பரமனும்; ஆங்கு நோதல் இல்லாத - அங்கே தனது தந்தையை இழந்தும் சிறிதும் மனவருத்தமில்லாதிருந்த; அன்பனையே நோக்கினான் - மெய்யன்புடைய பிரகலாதனையே பார்த்தான்.

தீமை எதுவும் இல்லாததாக உலகத்தை எல்லாம் படைத்துக்காத்து வருவதற்குப் பேருதவியாய் இருப்பவள் என்பதால் 'உலகீன்ற தெய்வம்' என்றார். கருதரிய கடலாடை உலகுபலவண்டம் கருப்பெறாது 'ஈன்ற கன்னி' என்றார் பிறரும். காதல்- பேரருள். சீர்த்தி - மிகுபுகழ். 'பயிலும் சுடரொளி மூர்த்தி' எனவும் 'பரஞ் சோதி' எனவும் 'பரஞ்சுடர் உடம்பாய்' எனவும் திருவாய் மொழி அருளிச் செய்தாங்கு 'உயர்ந்த பரஞ்சுடர்' என்றார். இறைவன் 'பேரொளி வடிவினன்' என்பது கருத்து. தந்தையை இழந்த நிலையிலும் சிறிதும் மனம் வருந்துதல் இன்றி இருந்த பிரகலாதனை "நோதல் இல்லாத அன்பன்" என்றார். அன்பனையே ஏகாரம் பிரிநிலை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the goddess who bore the world so that it might be free of harm
  2. he gazed with love; the hosts of sages who saw it
  3. sang his glory; and the supreme, exalted Light
  4. turned his gaze upon the devotee who felt no grief there.

What the poem says

As the Lord looks lovingly on his consort, his anger fades and the sages sing his praises. Then he turns to Pirakalātaṉ, who, though he has just lost his father, feels no grief. The phrase "supreme Light" echoes the Tiruvāymoḻi's way of describing God as a body of radiance.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tītu ilā āka ulaku īṉṟa teyvattaik
kātalāl nōkkiṉāṉ; kaṇṭa muṉik kaṇaṅkaḷ
ōtiṉār cīrtti; uyarnta parañcuṭarum
nōtal āṅku illāta aṉpaṉaiyē nōkkiṉāṉ.