கம்பராமாயணம் 6396 · யுத்த 3.166

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'உந்தையை உன்முன்னே கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?''என்றான்

பொருள் · Meaning in Tamil

உந்தையை உன்முன் கொன்று - (சிங்கப்பிரான் பிரகலாதனை நோக்கி) உனது தந்தையான இரணியனை உன்கண் எதிரே கொன்று; உடலைப் பிளந்து அளைய - அவனுடலை எனது கை நகங்களால் பிளந்து துழாவவும்; சிந்தை தளராது - சிறிதும் மனம் தளராமல்; அறம் பிழையாச் செய்கையாய் - அற நெறியில் நின்று தவறாத செயலை உடையவனே; அந்தமிலா அன்பு என்மேல் வைத்தாய் - என்மீது முடிவில்லாத பேரன்புடையனாயிருந்தாய்; அளியத்தாய் - எனது ரட்சகத்துக்கு உரியவனே; எந்தை - என் அப்பனே; இனி இதற்குக் கைம்மாறுயாது என்றான் - என்பால் பேரன்பு பூண்ட உனக்கு செய்யக்கூடிய கைம்மாறு ஏது? என்று கூறியருளினான்.

அளைதல் - துழாவுதல் (கலக்குதல்). அறம் பிழையா - அறத்திலிருந்து பிசகாத. அளியத்தாய் - கருணை செய்யத்தக்கவன் (ரட்சிக்கத்தக்கவன்). பகவானுக்குக் கைம்மாறு செய்ய இயலாமை பக்தர்க்கு இயல்பு. இங்கு நேர்மாறாகப் பக்தனுக்குக் கைம்மாறு செய்ய இயலாமை குறித்துப் பகவான் இரங்குகிறான். பாகவத தர்மம் இது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Though I killed your father before your eyes and tore open his body,
  2. your mind never wavered, O you whose deeds never stray from dharma!
  3. You set upon me a love without end! O you so worthy of my care!
  4. My dear one! What return can there now be for this?" he said.

What the poem says

The Lord speaks to Pirakalātaṉ. Even after watching his father killed and torn apart, the boy's love for God has not wavered. The commentary notes a reversal: usually it is the devotee who cannot repay God, but here God laments that he cannot repay his devotee.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'untaiyai uṉmuṉ koṉṟu, uṭalaip piḷantu aḷaiya,
cintai taḷarātu, aṟam piḻaiyāc ceykaiyāy!
antam ilā aṉpu eṉmēl vaittāy! aḷiyattāy!
entai! iṉi itaṟkuk kaimmāṟu yātu?'' eṉṟāṉ