கம்பராமாயணம் 6397 · யுத்த 3.167
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இமைப்பினை அயிரா ஓர் ஆயிரம் கூறிட்ட- கண்ணிமைப் பொழுதை மிக நுண்ணியதாக ஆயிரம் கூறுசெய்த; செயிரின் ஒரு பொழுதில்- சிறிய பகுதியான அச்சிறிய நேரத்துக்குள்; நுந்தையை யாம் சீறி- உனது தந்தையான இரணியனை நான் சினம் கொண்டு; உயிர் நேடுவேம் போல் - கை நகங்களால் உடலைப் பிளந்து உயிர் இருக்குமிடத்தைத் தேடுவது போல; உடல் அளைய - உடல் முழுதும் துழாவுவதை; கண்டும் செயிர் சேரா - நேரில் பார்த்தும் என் மீது சிறிதும் பகைமை பாராட்டாத; உள்ளத்தாய்க்கு - பேரன்பு கொண்ட உள்ளத்தை உடையவனாயிருந்த உனக்கு; என்இனியாம் செய்கேம் - நான் என்ன கைம்மாறு செய்வேன்!
இமைப்பு - கண்ணை மூடித்திறக்கும் நேரம். அயிரா - நுண்ணிய. செயிர் - குறை. உன் தந்தையின் உடலைப் பிளந்து, அளைந்த போதும் என்னிடம் சிறிதும் பகை உணர்வின்றி, பேரன்பு கொண்டிருந்த மனத்தை உடையவனான உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In one moment, a thousandth part of a fine blink of the eye,
- I raged at your father and searched through his body as if hunting for his life;
- though you watched it, your heart held no rancour —
- what now can I do for you?"
What the poem says
The Lord goes on. In a split second he tore open Iraṇiyaṉ's body as if searching for the life hidden inside it. The son watched all this and still felt no hatred toward him. What can God give in return for such love?