கம்பராமாயணம் 6398 · யுத்த 3.168

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'கொல்லேன், இனி உன் குலத்தோரை, குற்றங்கள்
எல்லை இலாதன செய்தாரே என்றாலும்;
நல்லேன், உனக்கு; என்னை நாணாமல் நான் செய்வது
ஒல்லை உளதேல், இயம்புதியால்''என்று உரைத்தான்.

பொருள் · Meaning in Tamil

இனி உன் குலத்தோரை - இனி மேல் உனது அசுரர் குலத்தே பிறந்தவர்களை; குற்றங்கள் எல்லை இலாதன செய்தாரே என்றாலும் - அவர்கள் அளவில்லாத குற்றங்களைச் செய்தவர்கள் என்று தெரிந்தாலும்; கொல்லேம் - அவர்களைக் கொல்ல மாட்டேன்; உனக்கு எம்மை நல்லேம் - உனக்கு எந்தப் பிறப்பிலும் நல்லவனாவேன்; நாம் செய்வது ஒல்லை உளதேல் - நான் உனக்கு ஏதேனும் விரைந்து செய்ய வேண்டியது இருந்தால்; நாணாமல்- நாணப்படாது; இயம்புதியால் என்றுரைத்தான் - கூறுவாயாக என்று பரமன் பணித்தான்.

எல்லை இலாதன - அளவற்றவை. எம்மை - எப்பிறப்பிலும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Never again will I kill those of your race,
  2. even if they commit crimes beyond all limit;
  3. I am your well-wisher in every birth; if there is anything I should do for you at once,
  4. tell me without shame," he said.

What the poem says

For Pirakalātaṉ's sake the Lord promises never again to kill anyone of his demon race, however great their crimes. He will be the boy's friend in every birth, and he invites him to ask freely for whatever he wants.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'kollēm, iṉi uṉ kulattōrai, kuṟṟaṅkaḷ
ellai ilātaṉa ceytārē eṉṟālum;
nallēm, uṉakku; emmai nāṇāmal nām ceyvatu
ollai uḷatēl, iyamputiyāl'' eṉṟu uraittāṉ.