கம்பராமாயணம் 6399 · யுத்த 3.169

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான்.

பொருள் · Meaning in Tamil

முன்பு பெறப் பெற்ற - எம்பெருமானே! உனக்கு அடியவனாக யான் முன்பு பெற்றதாகிய; பேறோ முடிவில்லை - பேறுகளுக்கு எல்லையே இல்லை; பின்பு பெறும் பேறும் உண்டோ - இனி மேலும் நான் பெற வேண்டிய பேறுகள் ஏதேனும் உண்டோ; பெறுகுவெனேல்- அப்படி ஏதேனும் வேண்டிப் பெறுவதென்றால்; என்பு பெறாத இழி பிறவி எய்தினும் - எலும்பில்லாத இழிந்த புழுவாகப் பிறந்தேன் என்றாலும்; நின் அன்பு பெறும் பேறு - உனது அன்பைப் பெற்று வாழும் பெரிய பேற்றினை; அடியேற்கு அருள் - உனது தொண்டனாகிய எனக்கு அருள்வாயாக என்றான்.

"என் பொழி யாக்கையுள் சேர்ப்பினும் அன்பொழியாமை அருள் மதி எனக்கே" என்ற திருவரங்கக்கலம்பகம் (1) ஒப்பு நோக்கத்தக்கது. "புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்" என்பதை ஒப்பிடுக.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The blessings I have already gained have no end;
  2. is there any blessing left to gain? If I must gain one,
  3. then even if I am born into some lowly, boneless birth,
  4. grant your servant the blessing of loving you," he said.

What the poem says

Pirakalātaṉ asks for nothing but love for God. Even if he is reborn as a lowly worm without bones, he wants to keep loving the Lord. The commentary compares a hymn on Śrīraṅgam and another prayer that asks God's feet to stay in the heart "even if I am born a worm".

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'muṉpu peṟappeṟṟa pēṟō muṭivu illai;
piṉpu peṟum pēṟum uṇṭō? peṟukuveṉēl
eṉpu peṟāta iḻi piṟavi eytiṉum niṉ
aṉpu peṟum pēṟu aṭiyēṟku aruḷ" eṉṟāṉ.