கம்பராமாயணம் 6400 · யுத்த 3.170

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன்" என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.

பொருள் · Meaning in Tamil

அன்னானை நோக்கி - 'நின் அன்பு பெறும் பேறு அருள்' என்ற அத்தகைய பிரகலாதனை இறைவன் பார்த்து; அருள் சுரந்த நெஞ்சினனாய் - அருள் பொழியும் மனத்தை உடையவனாய்; என் ஆனை வல்லன் - என்னப்பன் மிகவும் வல்லமை உள்ளவன்; என மகிழ்ந்த பேரீசன் - என்று கூறி, மனம் மகிழ்ந்த பெரிய பெருமாள்; முன் ஆன பூதங்கள் - எல்லாவற்றுக்கும் முன்னதாக என்னால் படைக்கப்பட்ட மண் முதலான பூதங்கள்; யாவையும் முற்றிடினும் - எல்லாம் அழிந்துபட்டாலும்; உன்நாள் உலவாய் நீ - உனது வாழ்நாள் என்றும் நீ கெட மாட்டாய்; என்போல் உளை என்றான் - என்னைப் போல நீயும் என்றும் உள்ளவனாவாய் என்றான்.

'ஈசன், அன்னானை நோக்கி உன் நாள் உலவாய் என் போல் உளை என்றான்' என இயையும். 'அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்' என வேண்டிய பிரகலாதனுடைய பக்திப் பெருமையை அறிந்த பரமன் அவனைப் பாராட்டி 'என் ஆனைவல்லன்' என்றான். ஆனை என்பது அருமை பாராட்டிக் கூறுவதோர் சொல் என்பர். ஐம்பெரும் பூதங்கள் மிகப் பழமையானவையாய் எவற்றுக்கும் மூலம் என்பதால் 'முன் ஆன பூதங்கள்' என்றார். உன் நாள் - உனக்குரிய வாழ் நாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Looking at him, his heart overflowing with grace,
  2. the great Lord, delighted, saying, "My dear one is wise indeed,"
  3. said: "Even if all the elements that came first should perish,
  4. your days shall never fail; like me, you shall endure."

What the poem says

Delighted by the boy's request, the Lord praises him with an affectionate word and grants him a life without end. Even when the five ancient elements, the earth, water, fire, air and space from which everything is made, pass away, Pirakalātaṉ will endure like God himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉṉāṉai nōkka aruḷ curanta neñciṉaṉ āy
"eṉ āṉai vallaṉ" eṉa makiḻnta pēr īcaṉ
"muṉ āṉa pūtaṅkaḷ yāvaiyum muṟṟiṭiṉum
uṉ nāḷ ulavāy nī eṉ pōl uḷai" eṉṟāṉ.