கம்பராமாயணம் 6401 · யுத்த 3.171

Section யுத்த காண்டம் / 3. இரணியன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"'மின்னைத் தொழு வளைத்தது அன்ன மிளிர் ஒளியாய்!
முன்னைத் தொழும்புக்கே ஆம் அன்றோ மூ உலகும்?
என்னைத் தொழுது ஏத்தி எய்தும் பயன் எய்தி
உன்னைத் தொழுது ஏத்தி உய்க உலகு எல்லாம்.

பொருள் · Meaning in Tamil

மின்னைத் தொழு வளைத்ததென்ன - தோன்றி உடன் மறையும் மின்னலைத் தொழு மரத்தில் பிடித்து அகப்படுத்தி வைத்ததைப் போல; மிளிர் ஒளியாய் - ஒளிவிட்டு விளங்கும் உடலை உடையவனே; முன்னைத் தொழும்புக்கே - முன்பு நீ கொண்ட அடித் தொண்டுக்கே; மூவுலகும் ஆம் அன்றோ - உனக்கு மூன்று உலகங்களும் உரியதாகும் அல்லவா?; உலகு எல்லாம் - உலகில் உள்ளவர்கள் எல்லோரும்; என்னைத் தொழுது ஏத்தி - என்னை வணங்கித் துதித்து; எய்தும் பயன் - அடையும் எல்லாப் பயன்களையும்; உன்னைத் தொழுது ஏத்தி - உன்னை வணங்கித் துதித்து; எய்தி உய்க - அடைந்து உய்வு பெறுவார்கள் (என்றான்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "O you who shine with light, like lightning caught and tethered to a post!
  2. Do not the three worlds belong to your devotion of old?
  3. Let all the world, gaining the fruit that comes from worshipping and praising me,
  4. be saved by worshipping and praising you."

What the poem says

The Lord declares that the three worlds belong to Pirakalātaṉ as a reward for his long devotion. He likens the boy's radiance to lightning that has been caught and tied to a post so that it no longer vanishes. He also promises that whoever worships Pirakalātaṉ will gain the same reward as worshipping God.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"'miṉṉait toḻu vaḷaittatu eṉṉa miḷir oḷiyāy!
muṉṉait toḻumpukkē ām aṉṟō mū ulakum?
eṉṉait toḻutu ētti eytum payaṉ eyti
uṉṉait toḻutu ētti uyka ulaku ellām.